ரூ.70,000 சம்பளம்.. முன்னணி விமான நிறுவனங்களில் பணியாற்ற சூப்பர் வாய்ப்பு..!! உடனே விண்ணப்பிங்க..

jobs at airport

தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்படும் தாட்கோ (TADCO) நிறுவனம், முன்னணி விமான சேவை நிறுவனங்களில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரும் சிறப்பு திட்டத்தை அறிவித்துள்ளது.


அதன்படி கேபின் க்ரூவ் (Cabin Crew), விமான நிலைய பணிகள் சேவை அடிப்படை பயிற்சி (Air Cargo Introductory+ DGR), பணியர் சேவை மற்றும் பயணசீட்டு முன்பதிவு அடிப்படை பயிற்சி (Passenger Ground Services + Reservation Ticketing) சுற்றுலா போக்குவரத்து அடிப்படை பயிற்சி (Foundation in Travel and Tourism) ஆகிய பயிற்சிகள் சான்றிதழுடன் வழங்கப்பட உள்ளது.

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

  • தமிழ்நாடு அரசு மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • விண்ணப்பதாரர்கள் 18 முதல் 23 வயதுக்குள் இருக்க வேண்டும்.
  • குறைந்தது 12-ம் வகுப்பு அல்லது பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
  • குடும்ப வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.

வழங்கப்படும் சலுகைகள்: இந்த பயிற்சிக்கான செலவுகள் முற்றிலும் தாட்கோவின் மூலம் ஏற்கப்படுகிறது. இப்பயிற்சி மொத்தம் 6 மாதங்கள் வழங்கப்படும். அந்த காலக்கட்டத்திற்கான விடுதி வசதி ஏற்படுத்தி தரப்படுகிறது. இதற்கானா கட்டணமும் தாட்கோவின் மூலம் ஏற்கப்படும்.

வேலைவாய்ப்பு: இந்த கட்டணமில்லா பயிற்சியை முழுமையாக முடிக்கும் இளைஞர்களுக்கு IATA – International AiR Transport Association – Canada மூலம் அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி சான்றிதழ் அளிக்கப்படும். இந்த சான்றிதழ் மூலம் இளைஞர்கள் கீழ்கண்ட நிறுவனங்கள் மற்றும் துறைகளில் நேரடி வேலைவாய்ப்புகளைப் பெறலாம்.

  • IndiGo Airlines
  • SpiceJet
  • Go First
  • Air India
  • நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும் சொகுசு கப்பல் துறைகள்
  • சுற்றுலா மற்றும் பயண நிறுவனங்கள்

சம்பளம்: ஆரம்ப காலத்திலேயே மாதம் ரூ.20,000 முதல் ரூ.22,000 வரை சம்பளம் பெறலாம். திறமைக்கு ஏற்ப பதவி உயர்வின் மூலம் ரூ.50,000 முதல் ரூ.70,000 வரை சம்பள உயர்வை பெறலாம்.

எப்படி விண்ணப்பிப்பது? தாட்கோவின் விமான சேவை பயிற்சியில் சேர விரும்புகிறவர்கள் https://tahdco.com/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Read more: S.I.R. பணிகள் சரியாக நடக்கவில்லை.. மக்கள் வாக்குரிமை பறிபோகும் அபாயம்..! – முதலமைச்சர் ஸ்டாலின் குற்றச்சாட்டு..

English Summary

Salary of Rs.70,000.. Super opportunity to work in leading airlines..!! Apply now..

Next Post

PPF திட்டத்தில் மாதம் தோறும் ரூ.4,000 டெபாசிட் செய்தால்.. 15 ஆண்டுகளுக்கு பின் எவ்வளவு பணம் கிடைக்கும்..?

Sun Nov 9 , 2025
If you deposit Rs. 4,000 every month in the PPF scheme, how much money will you get after 15 years?
Post Office Special Scheme.jpg

You May Like