இந்திய ராணுவத்தில் பல் மருத்துவ சேவை பிரிவில் பணியாற்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. பி.டி.எஸ் பட்டப்படிப்பு முடித்தவர்கள் மற்றும் எம்.டி.எஸ் முடித்தவர்களும் இந்த வாய்ப்பிற்கு விண்ணப்பிக்கலாம்.
காலிப்பணியிடங்கள்: மொத்தம் 30 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் தொடங்கியுள்ளது.
வயது வரம்பு: பல் மருத்துவர் பணியிடங்களுக்கு 31.12.2025 தேதியின்படி, அதிகபடியாக 45 வயது வரை இருக்கலாம்.
கல்வித்தகுதி:
* இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் இந்திய பல் மருத்துவ கவுன்சில் அங்கீகரித்த மருத்துவக் கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் இளநிலை/ முதுநிலை பல் மருத்துவம் (BDS/MDS) ஆகியவை முடித்திருக்க வேண்டும்.
* பல் மருத்துவராக பதிவு செய்திருக்க வேண்டும். விண்ணப்பதார்கள் கட்டாயம் இறுதி ஆண்டில் 55% மதிப்பெண்களுடன் தேர்வு செய்திருக்க வேண்டும்.
* 1 ஆண்டு internship முடித்திருக்க வேண்டும்.
* விண்ணப்பதார்கள் கட்டாயம் NEET (MDS) – 2025 தேர்வில் பங்கேற்று இருக்க வேண்டும்.
தேர்வு முறை:
* விண்ணப்பதாரர்கள் NEET MDS (முதுநிலை நீட் தேர்வு) மதிப்பெண்களின் அடிப்படையில் முதன்மையாக குறுக்கப்பட்டு, தகுதியானவர்களுக்கு நேர்காணல் அழைப்பு அனுப்பப்படும்.
* நேர்காணலில் பங்கேற்கும் போது, அனைத்து அசல் கல்வி மற்றும் தொழில் சார்ந்த சான்றிதழ்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
* சான்றிதழ் சரிபார்ப்பிற்குப் பின், நேர்காணல் மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பட்டியல் வெளியிடப்படும்.
* இறுதியாக, மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, தகுதியானவர்களின் இறுதி தேர்வு பட்டியல் வெளியிடப்படும்.
சம்பளம்: இப்பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.61,300 முதல் ரூ.1,20,900 வரை சம்பளம் நிர்ணயிக்கப்படும். ஆடை செலவிற்கு ஒரு வருடத்திற்கு ரூ.20,000, போக்குவரத்து செலவு, குழந்தைகள் கல்வி செலவு, தங்குமிடம் செலவு ஆகியவை வழங்கப்படும்.
விண்ணபிக்கும் முறை: விண்ணப்பிக்க விரும்பும் பல் மருத்துவர்கள் https://join.afms.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக பதிவு செய்து விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணமாக ரூ.200 ஆன்லைன் வழியாக செலுத்த வேண்டும்.
கடைசி தேதி: செப்டம்பர் 17-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.