மத்திய வெளியுறவு துறையின் கீழ் செயல்படும் புலனாய்வு பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக மோட்டார் போக்குவரத்து பிரிவில் பாதுகாப்பு உதவியாளர் (Security Assistant) பதவிக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது.
காலிப்பணியிடங்கள்: அதிகாரப்பூர்வ தகவலின்படி, தேசிய அளவில் 37 இடங்களில் செயல்படும் புலனாய்வு அலுவலகங்களில் மொத்தம் 455 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
பணியிட விவரம்:
* பாதுகாப்பு உதவியாளர் (Security Assistant) 455
வயது வரம்பு: 2025 செப்டம்பர் 28-ஆம் தேதியின்படி விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 27 வயது வரை இருக்க வேண்டும். அதே நேரத்தில், சமூக அடிப்படையிலான தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளன.
- எஸ்சி/எஸ்டி பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு கூடுதலாக 5 ஆண்டுகள் தளர்வு.
- ஒபிசி பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு கூடுதலாக 3 ஆண்டுகள் தளர்வு.
- அரசு பணியில் உள்ளவர்கள் அதிகபட்சம் 40 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
- மேலும், கணவரை இழந்த பெண்கள், விவாகரத்து பெற்றவர்கள் மற்றும் சட்டப்படி பிரிந்து வாழ்பவர்கள் ஆகியோருக்கும் சிறப்பு தளர்வு வழங்கப்பட்டுள்ளது.
- பொதுப் பிரிவு பெண்களுக்கு அதிகபட்சம் 35 வயது வரை,
- ஒபிசி பிரிவு பெண்களுக்கு 38 வயது வரை,
- எஸ்சி/எஸ்டி பிரிவு பெண்களுக்கு 40 வயது வரை விண்ணப்பிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தகுதிகள்:
* அங்கீகரிக்கப்பட்ட பாடத்திட்டத்தில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
* மோட்டார் வாகன ஓட்டுநர் உரிமம் அவசியம்.
* இருசக்கர வாகன ஓட்டுநர் உரிமையும் கட்டாயம்.
மோட்டார் மெக்கானிசம் குறித்த அடிப்படை அறிவு இருக்க வேண்டும்.
* குறைந்தது 1 ஆண்டு கார் ஓட்டிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
* விண்ணப்பிக்கும் மாநிலத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
சம்பள விவரம்: நிலை 3 கீழ் அடிப்படை சம்பளமாக ரூ.21,700 முதல் அதிகபடியாக ரூ.69,100 வரை வழங்கப்படும். மேலும் சிறப்பு பாதுகாப்பு ஒதுக்கீடாக அடிப்படை சம்பளத்தில் இருந்து 20 சதவீதம் அளிக்கப்படும். விடுமுறை நாட்களில் பணி செய்தால் அதற்கான தொகை வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: இப்பணியிடங்களுக்கு இரண்டு கட்டத் தேர்வு முறையின் மூலம் ஆட்சேர்ப்பு செய்யப்படுகிறது.
முதல் கட்டத் தேர்வு (Tier I): ஆன்லைன் வழியில் கொள்குறி (Objective) வகையில் நடைபெறும். மொத்தம் 100 கேள்விகள் 100 மதிப்பெண்கள். ஒவ்வொரு தவறான பதிலுக்கும் 0.25 மதிப்பெண்கள் குறைக்கப்படும் (Negative Marking).
குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்கள்:
- பொது பிரிவு – 30
- ஒபிசி – 28
- எஸ்சி/எஸ்டி – 25
- EWS – 30
இரண்டாம் கட்டத் தேர்வு (Tier II): வாகனம் ஓட்டும் திறன் மற்றும் நேர்காணல் அடிப்படையில் நடைபெறும். மொத்தம் 50 மதிப்பெண்கள். இதில் குறைந்தது 40% மதிப்பெண்கள் பெற வேண்டும். இரண்டு கட்டத் தேர்விலும் பெற்ற மதிப்பெண்கள் சேர்த்து தகுதியானவர்கள் இறுதியாக தேர்வு செய்யப்படுவார்கள்.
எப்படி விண்ணப்பிப்பது? https://www.mha.gov.in/en என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான ஆன்லைன் விண்ணப்பம் செப்டம்பர் 6-ம் தேதி முதல் தொடங்கி, 28-ம் தேதி வரை பெறப்படுகிறது.
Read more: பெரும் சோகம்!. லாரி மீது கார் மோதியதில் 5 இளம் தொழிலதிபர்கள் பலி!. பட்னாவில் அதிர்ச்சி!



