ரூ.89,955 சம்பளம்.. இந்திய அணுசக்தி நிறுவனத்தில் வேலை.. டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

job

இந்தியாவின் முன்னணி பொதுத்துறை நிறுவனமான இந்திய அணுசக்தி கழகம் (NPCIL), 2025 ஆம் ஆண்டிற்கான புதிய பணியாளர் சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


பணியிட விவரம்:

டெபியூட்டி மேனேஜர் (HR) – 31

டெபியூட்டி மேனேஜர் (F&A) – 48

டெபியூட்டி மேனேஜர் (C&MM) – 34

டெபியூட்டி மேனேஜர் (Legal) – 1

ஜூனியர் இந்தி மொழிப்பெயர்பாளர் – 8

வயது வரம்பு: டெபியூட்டி மேனேஜர் பதவிக்கு 18 முதல் 30 வயது வரை இருக்க வேண்டும். மொழிப்பெயர்பாளர் பதவிக்கு குறைந்தபட்சம் 21 முதல் அதிகபடியாக 30 வயது வரை இருக்க வேண்டும். மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு.

கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் 2 ஆண்டு எம்பிஏ முடித்திருக்க வேண்டும்/ 2 வருட முதுகலை பிஜி டிப்ளமோ/ மேலாண்மை முதுகலைப் பட்டம் முடித்திருக்க வேண்டும்.

பிரிவு வாரியான கூடுதல் தகுதிகள்:

1. மனிதவள மேம்பாடு (HR): Human Resource / HRM / Personnel Management / Labour Studies போன்ற மனிதவள சம்பந்தப்பட்ட பாடப்பிரிவுகளில் MBA/PG Degree.

2. நிதி பிரிவு (Finance): MBA (Finance) அல்லது CA / CMA / CFA பெற்றிருக்கலாம்.

3. C&MM பிரிவு (Contracts & Materials Management): எந்த ஒரு பொறியியல் துறையிலும் BE/B.Tech பட்டம்.

4. சட்ட பிரிவு (Legal)

  • LLB தேர்ச்சி
  • Bar Council பதிவு அவசியம்
  • குறைந்தது 3 ஆண்டு அனுபவம் தேவை.

ஜூனியர் இந்தி மொழிப்பெயர்ப்பாளர்: இந்தி மொழிப்பெயர்பாளர் பதவிக்கு ஆங்கிலம் மற்றும் இந்தி மொழி கொண்டு முதுகலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்:

* தேர்வாகும் நபர்களுக்கு நிலை 10 கீழ் ரூ.56,1000 மற்றும் ரூ.30,855 கொடுப்பனையுடன் மொத்தம் ரூ.89,955 மாதம் வழங்கப்படும்.

* இந்தி மொழிப்பெயர்பாளர் பதவிக்கு நிலை 6 கீழ் ரூ.35,400 உடன் ரூ.19,470 கொடுப்பனை சேர்ந்து ரூ.54,870 வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: மத்திய அரசு கட்டுப்பாட்டில் செயல்படும் அணுசக்தி நிறுவனமான NPCIL–இல் அறிவிக்கப்பட்ட டெபியூட்டி மேனேஜர் மற்றும் இந்தி மொழிப்பெயர்ப்பாளர் பணியிடங்களுக்கு 2 கட்டத் தேர்வு முறை பின்பற்றப்படுகிறது.

முதல் கட்டம்: ஆன்லைன் எழுத்துத் தேர்வு

மொத்த தேர்வு நேரம்: 120 நிமிடங்கள்

கேள்விகள்: 120 கேள்விகள்

பிரிவுகள்: 2 பிரிவு

மதிப்பெண்களில் சிறந்து விளங்குவோர் மட்டுமே அடுத்த கட்டமான நேர்காணலுக்கு அழைக்கப்படுவர்.

இரண்டாம் கட்டம்: தனிப்பட்ட நேர்முகத் தேர்வு

நேர்காணல் மதிப்பெண்கள்: 100 மதிப்பெண்கள்

நேர்காணலுக்கான தேதி, இடம் உள்ளிட்ட விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

தேர்வானவர்களுக்கு இமெயில் மற்றும் SMS மூலம் தகவல் அனுப்பப்படும்.

இறுதி தேர்வு பட்டியல்: இரண்டு கட்டத் தேர்விலும் பெறும் மதிப்பெண்கள் இணைந்தே இறுதி தரவரிசை நிர்ணயிக்கப்படும்.

எப்படி விண்ணப்பிப்பது? விண்ணப்பிக்க விரும்புவோர் https://www.npcilcareers.co.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.  நவம்பர் 27-ம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

Read more: தீவிரமடையும் டெல்லி குண்டுவெடிப்பு விசாரணை: அல்-பலா பல்கலைக்கழகத்துடன் தொடர்புடைய 25க்கும் மேற்பட்ட இடங்களில் ED சோதனை!

English Summary

Salary Rs.89,955.. Job at Indian Atomic Energy Organization.. Degree holders can apply..!

Next Post

“அப்பா.. அவ என் பொண்டாட்டி”..!! பெட்ரூமில் ஒட்டுத் துணி இல்லாமல் மாமனார் - மருமகள் உல்லாசம்..!! கடைசியில் மகனுக்கு நேர்ந்த கதி..!!

Tue Nov 18 , 2025
உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தில் உள்ள நங்கல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திசோத்ரா கிராமத்தைச் சேர்ந்தவர் சுபாஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது மகன் சவுரப் (30). சவுரப்புக்குத் திருமணம் ஆன நிலையில், தந்தை சுபாஷ், தனது மருமகள் உடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இந்த முறையற்ற உறவு குறித்து மகன் சவுரப்புக்கு தெரியவந்தபோது, அவர் தந்தை சுபாஷுடன் கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்தக் குடும்பப் பிரச்சனை தொடர்ந்து வந்த நிலையில், […]
Sex 2025 2

You May Like