இந்திய பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (SEBI) நாடாளுமன்ற சட்டத்தின் மூலம் நிறுவப்பட்ட ஒரு சட்டப்பூர்வ அமைப்பு. இங்கு பணியாற்றுவது பலரின் கனவாகும். தற்போது SEBIயில் 110 உதவி மேலாளர் (Officer Grade A – Assistant Manager) பணியிடங்கள் காலியாக உள்ளன.
பணியிட விவரம்:
- பொது – 56
- சட்டம் – 20
- தகவல் தொழில்நுட்பம் – 22
- ஆய்வு – 4
- மொழி – 3
- எலெக்ட்ரிக்கல் பொறியியல் – 1
- சிவில் பொறியியல் – 3
வயது வரம்பு: விண்ணப்பதார்கள் அதிகபடியகா 30 வயதைக் கடந்திருக்கக்கூடாது. இதில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 வருடங்கள், ஒபிசி பிரிவினருக்கு 3 வருடங்கள் தளர்வு வழங்கப்படுகிறது.
கல்வித்தகுதி:
* பொது பிரிவில் உள்ள பணியிடங்களுக்கு ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் முதுகலை அல்லது முதுகலை டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
* சட்டப்பிரிவிற்கு சட்டத்தில் இளங்கலை பட்டப்படிப்பு மற்றும் 2 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
* தகவல் தொழில்நுட்பம் பிரிவு பணிக்கு ஏதேனும் ஒரு பொறியியல் பிரிவில் இளங்கலை பட்டம் அல்லது கணினி அறிவியல், கணினி பயன்பாடு, தகவல் தொழில்நுட்பம் ஆகியவற்றில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
* ஆய்வு பிரிவிற்கு பொருளாதாரம், வணிகம், தொழில் நிர்வாகம், பொருளாதாரம் மற்றும் நிதி சார்ந்த படிப்பு, புள்ளியியல் மற்றும் தரவு ஆகியவற்றில் முதுகலை பட்டப்படிப்பு அல்லது முதுகலை டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
* மொழி பிரிவிற்கு இந்தி, ஆங்கிலத்தில் முதுகலை பட்டம் அல்லது வேறு பாடத்துடன் இந்தி மொழி கொண்டு முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
* எலெக்ட்ரிக்கல் மற்றும் சிவில் பொறியியல் பிரிவிற்கு பொறியியல் பட்டபப்டிப்பு முடித்திருக்க வேண்டும். மேலும் பணி அனுபவம் தேவை.
சம்பளம்: செபி உதவி மேலாளர் பதவிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ரூ.62,500 முதல் அதிகபடியாக ரூ.1,26,100 வரை சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: இப்பணிக்கு மூன்று கட்ட தேர்வு நடைபெறும். முதல் மற்றும் இரண்டாம் கட்டம் ஆன்லைன் வழி தேர்வாகும். இதில் தேர்ச்சி பெறுபவர்கள் 3 கட்டமாக நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.
எப்படி விண்ணப்பிப்பது? இப்பணியிடங்களுக்கு https://www.sebi.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். விண்ணப்பிக்க 28.11.2025 கடைசி தேதியாகும்.



