திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டத்தில் அமைந்துள்ள அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 31 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பணியிட விவரம்:
- இளநிலை உதவியாளர் – 10
- கூர்க்கா – 2
- திருவலகு – 4
- கால்நடை பாரமரிப்பாளர் – 2
- பெரிய சன்னதி உடல் – 1
- பெரிய சன்னதி வீரவண்டி – 1
- பெரிய சன்னதி சேமக்கலம் மற்றும் இதர வாத்தியங்கள் – 1
- தாயார் சன்னதி வீரவண்டி மற்றும் இதர வாத்தியங்கள் – 1
- உதவி யானைப்பாகன் – 2
- சலவையாளர் – 1
- கூட்டுபவர் – 6
வயது வரம்பு: இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 18 முதல் 45 வயது வரை இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி:
இளநிலை உதவியாளர்: 10ம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி அவசியம்.
பெரிய சன்னதி உடல், வீரவண்டி, சேமக்கலம், தாயார் சன்னதி வீரவண்டி மற்றும் இதர வாத்தியப் பிரிவு பணியிடங்கள்: தமிழில் படிக்கவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். மேலும், அரசு அங்கீகரித்த இசைப் பள்ளி அல்லது சமய நிறுவனங்களில் பணிக்கு தொடர்பான துறையில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
கூர்க்கா, திருவலகு, கால்நடை பராமரிப்பாளர், உதவி யானைப்பாகன், சலவையாளர், கூட்டுபவர்: தமிழில் படிக்கவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம்:
- இளநிலை உதவியாளர் / இசைக் கருவி வாசிப்பவர்கள் – ₹18,500 முதல் ₹58,600 வரை
- கூர்க்கா / திருவலகு / கால்நடை பராமரிப்பாளர் – ₹15,900 முதல் ₹50,400 வரை
- உதவி யானைப்பாகன் / சலவையாளர் – ₹11,600 முதல் ₹36,800 வரை
- கூட்டுபவர் – ₹10,000 முதல் ₹31,500 வரை
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு கிடையாது. நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதார்களின் கல்வித்தகுதி மற்றும் அனுபவம் கணக்கிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை:
* இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள், கோயிலின் அதிகாரப்பூர்வ இணையதளம் https://srirangamranganathar.hrce.tn.gov.in/ இல் கிடைக்கும் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்ய வேண்டும்.
* விண்ணப்பத்துடன் தேவையான கல்விச் சான்றிதழ்கள், சாதி சான்றிதழ், முகவரி ஆதாரம் உள்ளிட்ட ஆவணங்களை இணைத்து, அரசிதழ் பதிவு பெற்ற அலுவலரின் சான்றொப்பத்துடன் அனுப்ப வேண்டும்.
* மேலும், விண்ணப்பதாரர் மீது எந்தவித குற்றவியல் வழக்கும் இல்லை என்பதை உறுதிப்படுத்தும் காவல் நிலையச் சான்றிதழும் இணைக்கப்பட வேண்டும்.
* விண்ணப்ப அஞ்சல் உறையில் பணியின் பெயரும் வரிசை எண்ணும் குறிப்பிடப்பட வேண்டும். அத்துடன், அஞ்சல் வில்லை ஒட்டிய சுயவிலாசமிட்ட ஒப்புகை அட்டை மற்றும் அஞ்சல் உறை இணைக்கப்பட வேண்டும்.
* விண்ணப்பிக்க விரும்புவோர் 25.11.2025 மாலை 5 மணிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுக்கலாம்.
அனுப்ப வேண்டிய முகவரி: இணை ஆணையர்/ செயல் அலுவலர், அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில், ஸ்ரீரங்கம், திருச்சி – 620006.
Read more: இந்த 2 ரத்த வகை கொண்டவர்களுக்கு வயிற்றுப் புற்றுநோய் வரும் ஆபத்து அதிகம்..! ஆய்வில் அதிர்ச்சி தகவல்!



