ரூ.60,000 வரை சம்பளம்..!! பல்வேறு காலியிடங்கள்..!! மிஸ் பண்ணாம உடனே விண்ணப்பியுங்கள்..!!

சென்னை மாவட்ட சுகாதாரத்துறையில் பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

ரூ.60,000 வரை சம்பளம்..!! பல்வேறு காலியிடங்கள்..!! மிஸ் பண்ணாம உடனே விண்ணப்பியுங்கள்..!!

பணியின் முழு விவரங்கள்…

பதவியின் பெயர்சம்பளம்கல்வித் தகுதி
மாவட்ட PPM ஒருக்கிணைப்பாளர்ரூ.26,500MSW/M.Sc உளவியம் – முதுநிலை பட்டம்

தொடர்புதுறை/ACSM/பொது மற்றும் தனியார் பங்களிப்பு/சுகாதார திட்டங்களில் ஓராண்டு பணியாற்றிய அனுபவம்


புள்ளி விவர உதவியாளர் – DEO (நோடல் DRTB மையம்)
ரூ.26,000புள்ளியியலில் இளங்கலை பட்டம் மற்றும் அரசு தொழில் நுட்ப கல்வி குழுமத்தால் அங்கீகரிக்கப்பட்ட கணினி பயன்பாட்டில் பட்டயம் (DCA) அல்லது அதற்கு இணையானது.

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒரு நிமிடத்தில் 40 வார்த்தைகள் தட்டச்சு
செய்யும் ஆற்றல்

MS Word, Excel, கணக்கியல் மென்பொருள் பயன்படுத்துதலை நன்கு அறிந்தவராக இருக்க வேண்டும்
முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர்ரூ.19,800அறிவியலில் இளங்கலை அல்லது அரசு அங்கீகரிக்கப்பட்ட சுகாதார ஆய்வாளர் படிப்பு MS Office பயன்படுத்துததில் கணிணி சான்றிதழ்
கணினி இயக்குபவர்ரூ.13,50010,+2 மற்றும் தொழில் நுட்பகல்வி உரிமம் குழுமத்தால் அங்கீகரிக்கப்பட்ட கணினி பயன்பாட்டில் பட்டயம் (DCA)

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒரு நிமிடத்தில் 40 வார்த்தைகள் தட்டச்சு
செய்யும் ஆற்றல்
ஆய்வக தொழில்நுட்ப வல்லுனர்ரூ.13,00010, +2 தேர்ச்சி மற்றும் மருத்துவ கல்வி இயக்குநகரத்தால் அங்கீகரிக்கப்பட்ட 2 வருட மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப வல்லுனர் பட்டயம்
TB சுகாதாரப் பார்வையாளர் ரூ.13,300அறிவியலில் இளங்கலை அல்லது அறிவியல் பாடத்துடன் (10,+2) தேர்ச்சி மற்றும் 2 வருட BO MPHW/LHV/ANM/ சுகாதார பணியாளர் பிடிப்பு அல்லது அரசு அங்கீகரிக்கப்பட்ட காசநோய் சுகாதார பார்வையாளர் படிப்பு

MS Office பயன்படுத்துததில் கணிணி சான்றிதழ்
மருத்துவ அலுவலர் (DTC)ரூ.60,000இந்திய மருத்துவ கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ் பட்டம் பெற்றவர்கள். தேசிய மருத்துவ ஆணையத்தில் பதிவு செய்திருக்க வேண்டும்.
மருத்துவ அலுவலர் (மருத்துவக் கல்லூரி)ரூ.60,000இந்திய மருத்துவ கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளில் MBBS பட்டம் பெற்றவர்கள்.

தேசிய மருத்துவ ஆணையத்தில் பதிவு செய்திருக்க வேண்டும்.
முதுநிலை மருத்துவ அலுவலர்ரூ.60,000
ஆற்றுப்படுத்துநர்ரூ.13,000சமூகப்பணி/ சமூகவியல்/ உளவியல் இளங்கலை பட்டம்

அடிப்படை கணினி அறிவு

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பங்கள் தகுதி மற்றும் சமர்பிக்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்படும். தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வுக்கும் அழைக்கப்படுவர். நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி மற்றும் நேரம் தபால் மூலமாக பின்னர் தெரிவிக்கப்படும். நேர்காணலில் கலந்துக்கொள்வதற்கு TA/DA வழங்கப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்பது எப்படி?

சென்னை மாவட்டத்தில் நிரந்தரமாக குடியிருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பங்கள் பரிந்துரைக்கப்பட்ட படிவத்தில் முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டு தேவையான ஆவணங்களின் சுய கையொப்பமிட்ட நகல்களுடன் திட்ட அலுவலர், தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் (NTEP), மாவட்ட காசநோய் மையம் எண் 26, புளியந்தோப்பு நெடுஞ்சாலை, புளியந்தோப்பு, சென்னை – 600 012 என்ற முகவரிக்கு தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ 23.01.2023 அன்று பிற்பகல் 5 மணிக்குள் வரை அனுப்பலாம்.

CHELLA

Next Post

இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க..!! தனியார் வங்கிகளில் வேலைவாய்ப்பு..!! என்ன செய்ய வேண்டும்..?

Tue Jan 17 , 2023
வங்கி மற்றும் காப்பீட்டுத் துறைகளில் ஆதிதிராவிட இளைஞர்கள் பணிபுரிய ஏதுவாக திறன் பயிற்சி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சியை முடித்தவர்கள் HDFC, ICICI உள்ளிட்ட தனியார் வங்கிகளில் வேலைவாய்ப்புக்கு வழிவகை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சார்ந்த இளைஞர்களுக்கு பல்வேறு திறன் சார்ந்த வேலைவாய்ப்பு பயிற்சி திட்டங்களை தாட்கோ நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், தற்போது வங்கி மற்றும் காப்பீட்டுத் துறைகளில் ஆதிதிராவிட இளைஞர்கள் […]
bank in e1654658464705

You May Like