இந்தி பிக்பாஸ் 19வது சீசனில் ஏஐ போட்டியாளர் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சி அனைத்து மொழி பார்வையாளர்களின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. அ ற்கு முக்கிய காரணம் ஒன்று இருக்கிறது. ஒரு சீசன் முடிந்த ஆறாவது மாதத்திலேயே அடுத்த சீசனை துவங்குகிறார்கள். ஜனவரி 19ம் தேதி பிக் பாஸ் 18 கிராண்டு ஃபினாலே நடந்த நிலையில் ஜூலை மாத இறுதியில் 19வது சீசன் துவங்குகிறதாம்.
வழக்கம் போல் இந்த சீசனையும் சல்மான் கான் தொகுத்து வழங்க இருக்கிறார். அடுத்த சீசன் அக்டோபர் மாதம் துவங்கும் என நினைத்த இந்தி பார்வையாளர்கள் சந்தோஷத்தில் இருக்கிறார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சி இருந்தால் என்டர்டெயின்மென்ட்டுக்கு பஞ்சமே இருக்காது. இந்தி பிக்பாஸ் 19வது சீசனில் ஏஐ போட்டியாளர் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் 19 நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் AI போட்டியாளருக்கு ‘ஹபுபு’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த ஹபுபுவை, ஐக்கிய அரபு அமீரகத்தை தளமாகக் கொண்ட IFCM (International Fictional Character Management) நிறுவனம் உருவாக்கியுள்ளது. அவர் 16 போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்கிறார் எனக் கூறப்படுகிறது. இதுவரை பிக் பாஸ் நிகழ்ச்சிகளில் சர்ச்சைகள், சண்டைகள், உணர்வுப் பரபரப்புகள் என்று மனித உணர்வுகள் மேலோங்கியவையாக இருந்தது. ஆனால் ஹபுபு எனும் AI ரோபோ இவற்றை எப்படிச் சமாளிக்கப் போகிறார்? என்பது மிகப் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
IFCM நிறுவனம் கூறுவதில்படி, ஹபுபு மற்ற போட்டியாளர்களைவிட “புத்திசாலித்தனமாக” செயல்படாத வகையில் கட்டுப்படுத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவு கொண்டதாக இருக்கிறாராம். மேலும் மனித உணர்வுகளை புரிந்து கொள்ளும் திறன், பல மொழிகளைப் பேசக்கூடிய திறன் (இந்தி உட்பட), வீட்டுக்குள் உள்ள சூழலுக்கு ஏற்றபடி தன்னைத் தானே மாற்றும் திறன், அடிப்படை வேலைகளைச் செய்யும் சாமர்த்தியம் போன்ற திறமைகளை இந்த ஏஐ பெற்றிருக்கும்.
AI ரோபோ போட்டியாளர் என்ற புதுமையான கான்செப்ட் ஏற்கெனவே பிக் பாஸ் ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இது வெற்றிபெற்றால், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பிற மொழிகளிலும் AI போட்டியாளர்கள் பங்கேற்கும் வாய்ப்பு இருக்கலாம் என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், பிக் பாஸ் நிர்வாகத்தினரிடமிருந்து இதுவரை ஹபுபு பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Read more: நெல்லை- சென்னை வந்தே பாரத் ரயிலில் திடீரென புகை.. அலறிய பயணிகள்..!! என்ன நடந்தது..?