இந்தி பிக்பாஸ் ஷோவை நடத்த சல்மான் கானுக்கு வழங்கப்படும் சம்பளம் குறித்த விவரம் பாலிவுட் வட்டாரத்தில் பற்றி எரிந்து வருகிறது.
வெள்ளித்திரை போலவே சின்னத்திரையும் நாளுக்கு நாள் அதீத வளர்ச்சி அடைந்து வருகிறது. எப்போதும் புதுமையாக இருப்பதுதான் சின்னத்திரையின் சவாலே. சில நேரங்களில் சினிமாவை விட சின்னத்திரையில் தான் சுவாரஸ்யம் அதிகம் இருக்கும். அந்த வகையில், இந்திய தொலைக்காட்சியின் பிரபலமான ரியாலிட்டி ஷோ என்றால் அது பிக்பாஸ் நிகழ்ச்சி தான். இந்நிகழ்ச்சி தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில், இந்தியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கி வருகிறார். இவர், கடைசியாக தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 18 நிகழ்ச்சி, 15 வாரங்கள் நீடித்த நிலையில், சல்மான் கானுக்கு ரூ.250 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதாவது, மாதத்திற்கு ரூ.60 கோடி அவரின் சம்பளம் ஆகும். இதன் மூலம் சின்னத்திரையில் அதிக சம்பளம் வாங்கும் பிரபலமாக சல்மான் கான் இருக்கிறார்.
பிக்பாஸ் சீசன் 4 முதல் 6 வரை ஒரு நாளுக்கு சல்மான் கான் இரண்டரை கோடி சம்பளம் வாங்கினார். 7-வது சீசனில் அவரது சம்பளம் ரூ.5 கோடியாக உயர்ந்தது. 2014இல் அது ரூ.5.5 கோடியாக ஏறியது. கடந்த 2015ஆம் ஆண்டில் அவரது சம்பளம் ரூ.8 கோடியானது. தற்போது ஒரு நாள் ஷூட்டுக்கு ரூ.11 கோடி சம்பளம் வாங்க தொடங்கியுள்ளார். இந்த சம்பள உயர்வை கேட்டு பாலிவுட் திரையுலகம், அதிர்ச்சியில் உறைந்து போய் இருக்கின்றனர்.