தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா.. தென்னிந்தியாவின் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் அவர் வலம் வருகிறார்.. நடிகர் நாகார்ஜுனாவின் மகனும், நடிகருமான நாக சைதன்யாவும் சமந்தாவும் கடந்த 2017-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்..
எனினும் 2021-ம் இந்த தம்பதி விவாகரத்து அறிவிப்பை வெளியிட்டனர்.. அதன் பிறகு விரைவில் அவர் மயோசிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு பல சிரமங்களை எதிர்கொண்டார். இதனிடையே நாக சைதன்யா, நடிகை சோபிதா துலிபாலாவை திருமணம் செய்து கொண்டார்.
நாக சைதன்யாவிடமிருந்து விவாகரத்து பெற்ற பிறகு சிங்கிளாக இருக்கும் சமந்தா, மீண்டும் காதலிக்க வருவதாக கூறப்படுகிறது. பாலிவுட் இயக்குனர் ராஜ் நிடிமோருவை அவர் காதலிப்பதாகவும், அவர்கள் ரகசியமாக டேட்டிங் செய்வதாகவும் ஒரு தகவல் பரவி வருகிறது..
சமீபத்தில், சமந்தா மற்றும் ராஜின் சில புகைப்படங்கள் கசிந்தது.. மேலும் சமந்தாவின் தோளில் கைபோட்டுக்கொண்டு சிரித்துக்கொண்டிருக்கும் ராஜின் புகைப்படம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமந்தாவின் இரண்டாவது திருமணம் குறித்த தகவல் வேகமாக பரவி வந்தது…
இந்த நிலையில் நடிகை சமந்தா மற்றும் இயக்குனர் ராஜ் நிடிமோரு இருவரும் திருமணம் செய்து கொண்டனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது.. கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்திற்குள் உள்ள லிங் பைரவி கோவிலில் இன்று அதிகாலையில் திருமணம் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன..
மேலும் ராஜின் முன்னாள் மனைவி ஷ்யாமலி தே, தனது இன்ஸ்டா பக்கத்தில் “விரக்தியடைந்தவர்கள் அவநம்பிக்கையான காரியங்களைச் செய்கிறார்கள்” என்ற ஒரு மறைமுகமான மேற்கோளைப் பதிவிட்டிருந்தார்.. இது சமந்தா – ராஜ் நிடிமோரு திருமணம் தொடர்பான ஊகங்களை வலுப்படுத்தி உள்ளது.. ஷ்யாமிலியும் ராஜும் 2022 இல் விவாகரத்து செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது..
Read More : வேகமாக வளரும் AI; அடுத்த 20 ஆண்டுகளில் வேலையே இருக்காது; பணத்தின் தேவை குறையும்; எலான் மஸ்க் கணிப்பு!



