வீட்டின் பூஜை அறையில் சாமி சிலைகளை இப்படி தான் வைக்க வேண்டும்.. இல்லை எனில் வாஸ்து தோஷம் ஏற்படுமாம்..

நம் வீட்டில் சாமி சிலைகளை வைத்திருப்பது எப்போதுமே ஒரு மங்களகரமானதாக கருதப்படுகிறது, ஏனெனில் நீங்கள் வெவ்வேறு தெய்வங்களின் சிலைகளை வைத்திருக்கும்போது, ​​தெய்வங்களின் ஆசீர்வாதம் நமக்கும் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது, மேலும் இது வீட்டில் இருந்து பிரச்சனைகள் மற்றும் சச்சரவுகளைத் தடுக்க உதவுகிறது என்று பலரின் நம்பிக்கையாக உள்ளது.. இருப்பினும், ஒரு வீட்டில் எப்படி, எந்த சிலைகளை வைக்க வேண்டும் என்பதில் சில விதிகள் மற்றும் நம்பிக்கைகள் உள்ளன.. ஒருவேளை, சரியான சிலையை வீட்டில் வைக்கவில்லை என்றால் அது வாஸ்து தோஷத்தை ஏற்படுத்தும். இது வீட்டிற்குள் துரதிர்ஷ்டத்தை கொண்டு வரக்கூடும். ஒரு வீட்டில் எந்த சிலைகள் வைக்கப்பட வேண்டும், அதைவிட முக்கியமாக எப்படி வைக்க வேண்டும் என்பது முக்கியம்.

98057226

வீட்டில் பூஜை செய்யும் இடத்தில் பெரிய சிவலிங்கத்தை வைக்கக் கூடாது என்பது ஐதீகம். மேலும், வீட்டில் பூஜை செய்யும் இடத்தில் வைக்கப்படும் சிவலிங்கத்திற்கு தினமும் தண்ணீர் மற்றும் பால் அபிஷேகம் செய்ய வேண்டும். இறைவனை மங்கல மூர்த்தியாக வடிவெடுத்து வழிபட்டால் நாம் கேட்டதை விட பல மடங்கு புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். தெய்வங்களை சிலை வடிவில் வழிபடுவது ஆன்மீக அடிப்படை மட்டுமல்ல, அதற்குப் பின்னால் வலுவான அறிவியல் காரணமும் இருப்பதாக கூறப்படுகிறது.

நாம் தினமும் வழிபடுவதால், வீட்டில் மகிழ்ச்சி பொங்கும், வீட்டில் இருந்த அனைத்து எதிர்மறைகளும் நீங்கும். ஆனால் வீட்டின் பூஜை அறையின் திசையும் நிலையும் சரியான முறையில் இருந்தால் மட்டுமே இது சாத்தியமாகும். எனவே, வீட்டில் உள்ள பூஜை அறை வாஸ்து படி எந்த திசையில் வைக்க வேண்டும், எந்தெந்த சிலைகளை பூஜை வீட்டில் வைக்க வேண்டும் அல்லது வைக்கக்கூடாது என்பது குறித்து பார்க்கலாம்..

பூஜை அறை எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும். மேலும் உடைந்த பொருட்களையோ, படங்களையோ வைக்கக் கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டும்.
தினமும் வீட்டின் பூஜை அறையில், விளக்குகள் ஏற்றப்பட வேண்டும். மிக முக்கியமாக பூஜை அறைக்குள் குளிக்காமல் நுழையக்கூடாது. புராணங்களில் முதலில் வழிபடுபவர் விநாயகர். எந்த ஒரு மங்கள வேலைகளை செய்வதற்கு முன் விநாயகரை வழிபட வேண்டும்.

வீட்டின் பூஜை அறையில் ஒரே ஒரு விநாயகர் சிலை மட்டுமே வைக்க வேண்டும். மேலும், வாஸ்து சாஸ்திரத்தின் படி, விநாயகரை மா லட்சுமியின் இடது பக்கத்திலும், மா லட்சுமியை சரஸ்வதியின் வலது பக்கத்திலும் வைக்க வேண்டும். விநாயகர் சிலையை எப்போதும் அமர்ந்த நிலையில் வைக்க வேண்டும்..

லட்சுமி தேவியின் சிலையை வீட்டில் கண்டிப்பாக வைக்க வேண்டும், ஏனெனில் லட்சுமி வீட்டில் மகிழ்ச்சியையும் செழிப்பையும் தருவதாக நம்பப்படுகிறது. லக்ஷ்மி தேவி எங்கு வீற்றிருக்கிறாரோ அந்த வீட்டில் வறுமை நீங்குவதாக ஐதீகம். ஆனால் வீட்டில் லட்சுமி சிலையை வைக்கும் போது சிலை அமர்ந்த நிலையில் இருக்க வேண்டும். வணங்கும் இல்லத்தில் நிற்கும் நிலையில் உள்ள சிலையை வைக்கக் கூடாது. அதே சமயம் லட்சுமி தேவியின் சிலையுடன் விஷ்ணுவின் சிலையும் வைத்தால் அது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது.

பூஜை அறையில் அனுமன் சிலையையும் வைக்க வேண்டும். அனுமன் சிலையை வைத்தால், குடும்பத்தில் ஏற்பட்டுள்ள சண்டைகள் அனைத்தும் அழிந்துவிடும் அல்லது தீரும் என்பது ஐதீகம். இங்கும், வழிபாடு செய்யும் வீட்டில் அமர்ந்த நிலையை அனுமன் சிலையை வைத்திருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

RUPA

Next Post

ஒருநாள் லீவு தராததால் வழக்கு போட்ட பெண்!... சலூன் கடை உரிமையாளருக்கு ரூ.3 லட்சம் அபராதம் விதிப்பு!

Mon Feb 20 , 2023
இங்கிலாந்தில் பெண் ஊழியர் ஒருவருக்கு லீவு கேட்டு தராததால் சலூன் கடை உரிமையாளருக்கு ரூ.3 லட்சம் அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. பெண்கள் தங்களது மாதவிடாய் காலத்தில், நான்கு முதல் ஐந்து நாள்கள் கடுமையான வலியை எதிர்கொள்கிறார்கள். இது அவர்களின் தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை பாதிக்கிறது. இந்த நிலையில், உலகில் ஜப்பான், இந்தோனேசியா, தென்கொரியா, ஜாம்பியா போன்ற ஒரு சில நாடுகளில் மட்டுமே பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் விடுமுறை […]

You May Like