பெரும் சோகம்.. சிம்பு பட நடிகையின் தாயார் மரணம்.. திரை பிரபலங்கள் இரங்கல்..!!

sana khan mother

சிம்பு நடிப்பில் கடந்த 2008ஆம் ஆண்டு வெளிவந்த சிலம்பாட்டம் படம் மூலம் கதாநாயகியாக கதா நாயகியாக அறிமுகமானவர் நடிகை சனா கான்.
அதற்குப் பிறகு ‘தம்பிக்கு எந்த ஊரு’, ‘பயணம்’, ‘ஆயிரம் விளக்கு’ உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் சில படங்களில் நடித்துள்ளார்.


இவர் கடந்த 2020ஆம் ஆண்டு பஃப்டி அனால் என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பிறகு சினிமாவில் நடிப்பதையே விட்டு விட்ட சனா கான் தனது கணவர் பிசினஸை கவனித்து வருவதாக கூறுகின்றனர். சமீபத்தில் தான் கர்ப்பமாக இருப்பதையும் அறிவித்துள்ளார் சனா கான். இந்நிலையில் சனா கானின் தாயார் சயீதா உடல் நலக்குறைவினால் நேற்று காலமானார்.

இந்த செய்தியை அவர் இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம் உறுதி செய்தார். தனது தாயாருக்குக்காக பிராத்தனை செய்யுங்கள் எனவும் கேட்டுக்கொண்டார். அவரது உடல் நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. நீண்ட நாட்களாக உடல் நலகுறைவினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று மரணம் அடைந்துள்ளார்.

சமீப காலமாக சனா கான், தனது தாயாருடன் எடுத்த புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் நினைவுகளை அடிக்கடி சமூக ஊடகங்களில் பகிர்ந்து வந்தார். கடந்த 2023ஆம் ஆண்டில், தனது தாயார் சனா கானின் ஷூ லேஸை கட்டித் தரும் வீடியோவை பகிர்ந்து, “தாயின் அன்பை விட உண்மையானதும், தன்னலமற்றதும் எதுவும் இல்லை”
என்று குறிப்பிட்டிருந்தார். அவரது மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Read more: IND vs ENG| முதல் டெஸ்டில் இந்தியா தோல்வி!. பயிற்சியாளர் கம்பீர் அதிரடி மாற்றம்?. வெளியான தகவல்!.

Next Post

மாஸ் காட்டிய திருப்பூர் தமிழன்ஸ்!. பிளே ஆப்- சுற்றுக்கு முன்னேற்றம்!. கோவை கிங்ஸ் ஏமாற்றம்!

Wed Jun 25 , 2025
9-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரின் 3-வது கட்ட லீக் ஆட்டங்கள் நெல்லை சங்கர் நகரில் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது. நேற்று நடைபெற்ற 22-வது லீக் ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ் – ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற திருப்பூர் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய திருப்பூர் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல், […]
tnpl ITT won 11zon

You May Like