” எனக்கு Hurt ஆகுது..” சங்கீதா விவாகரத்து விவகாரம்.. முதன்முறையாக மனம் திறந்த விஜய்..! என்ன சொன்னார் தெரியுமா..?

vijay sangeetha n 2

தவெக சார்பில் இன்று மாமல்லபுரத்தில் ஃபோர் பாயிண்ட்ஸ் பை ஷெரட்டன் ஹோட்டலில் மகளிர் தின விழா நடைபெற்றது.. இந்த விழாவில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பெண்கள் கௌரவிக்கப்பட்டனர்.. இந்த விழாவில் தவெக தலைவர் விஜய் யானை தொடர்பான குட்டிக்கதை உடன் தனது உரையை தொடங்கினார்..


பெண்களுக்கான வாக்குறுதிகளை விஜய் அளித்தார்.. மகளிருக்கு மாதம் ரூ.2,500, ஆண்டுக்கு 6 இலவச கேஸ் சிலிண்டர்கள், திருமணத்திற்கு 1 சவரவன் தங்கம், அனைத்து பேருந்துகளிலும் இலவசம் போன்ற வாக்குறுதிகளை அவர் அளித்தார்..

இந்த நிகழ்ச்சியில் பேசிய விஜய், தனது விவாகரத்து குறித்தும் பேசினார்.. அப்போது “ சமீபத்தில் சில பிரச்சனைகளில், நீங்கள் போராடி Hurt ஆவதை நான் பார்க்கிறேன்.. அதை பார்த்து எனக்கு Hurt ஆகுது.. அதெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன்.. நானும் நீங்களும் சேர்ந்து மக்கள் பிரச்சனைகளை மட்டும் பார்போம்.. அவ்வளவு எல்லாம் Hurt ஆகாதீங்க.. அதெல்லாம் வருத்தம் எல்லாம் கிடையாது.. நம்பிக்கையோடு இருங்க.. நல்லதே நடக்கும்.. வெற்றி நிச்சயம்..” என்று தெரிவித்தார்.

முன்னதாக விஜய்யிடம் இருந்து தனக்கு விவாகரத்து வேண்டும் என அவரின் மனைவி சங்கீதா மனு தாக்கல் செய்திருந்தார்.. மேலும் தனது மனுவில் “ விஜய் நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருக்கிறார்.. அந்த நடிகை எனது கணவருடன் அடிக்கடி வெளிநாடுகளுக்கு சென்று வந்தார்.. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் பகிர்ந்தார்..

அது எனது பிள்ளைகளுக்கும், குடும்பத்திற்கும் அவமானத்தை கொடுத்தது.. நன்மதிப்பு கருதி அந்த நடிகையின் பெயரை குறிப்பிடவில்லை.. எனது கணவரின் மூலம் நெருக்கடி வந்தால் அந்த நடிகையின் பெயரையும் சொல்வேன்.. அவரை 2-வது எதிர் மனு தாரராக சேர்ப்பேன்..” என்று குறிப்பிட்டிருந்தார்..

விஜய்யும் த்ரிஷாவும் கடந்த சில ஆண்டுகளாக டேட்டிங்கில் இருப்பதாக அரசல் புரசலாக தகவல் வந்த வண்ணம் இருந்தது.. இந்த சூழலில் சங்கீதாவின் இந்த குற்றச்சாட்டு மூலம் அந்த நடிகை த்ரிஷா என்பது அனைவருக்கும் தெரிந்துவிட்டது..

இந்த பரபரப்பு அடங்குவதற்குள், விஜய்யும், த்ரிஷாவும் ஒரே நிற ஆடையில் ஒன்றாக, கல்பாத்தி அகோரம் மகன் திருமணத்திற்கு நேற்று முன் தினம் வந்தார்.. மேடைக்கு ஒன்றாக சென்று மணமக்களை வாழ்த்திவிட்டு, போட்டோவுக்கு போஸ் கொடுத்துவிட்டு ஒன்றாகவே புறப்பட்டனர்.. இந்த சம்பவம் தான் தற்போது சமூக வலைதளங்களில் ஹாட் டாபிக் ஆக மாறி உள்ளது.

இந்த நிலையில், இன்று சங்கீதா செங்கல்பட்டு நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா புதிதாக ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளார்.. அதில் விஜய் தன்னை நீலாங்கரை வீட்டில் வசிக்க அனுமதிக்கவில்லை எனவும், தன்னை அந்த வீட்டில் வசிக்க அனுமதி வழங்க வேண்டும் என்றும் கோரியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..

Read More : மகளிருக்கு ரூ.2,500, திருமணத்திற்கு 1 சவரன் தங்கம்.. குழந்தைகளுக்கு தங்க மோதிரம்.. வாக்குறுதிகளை அள்ளி வீசிய விஜய்..!

RUPA

Next Post

இந்த நாட்களில் தவறுதலாகக் கூட காலணிகள் வாங்காதீங்க.. சிக்கலுக்கு வழிவகுக்கும்..!

Sat Mar 7 , 2026
நாம் அணியும் செருப்புகள் நம் ஆளுமையை மட்டுமல்ல, நம் விதியையும் மாற்றும் என்று நீங்கள் நம்புகிறீர்களா? ஆம், வாஸ்து சாஸ்திரத்தின்படி, நாம் அணியும் செருப்புக்கும் நம் வீட்டின் செல்வத்திற்கும் செழிப்புக்கும் பிரிக்க முடியாத தொடர்பு உள்ளது. பலர் அறியாமல் செய்யும் சிறிய தவறுகள், அதாவது சில நாட்களில் செருப்புகளை அப்படியே விட்டுவிடுவது, புதியவற்றை வாங்குவது போன்றவை வீட்டிற்குள் வறுமையை அழைக்கின்றன என்று வாஸ்து நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அமாவாசை நாளில் செருப்புகளை […]
dont buy shoes on these days 1

You May Like