இந்திய மரபு, புராணங்கள், சாஸ்திரங்களில் “சாபம்” என்ற கருத்து அடிக்கடி தோன்றும். மனித வாழ்வில் ஏற்படும் தடைகள், தோல்விகள், துயரங்கள் அனைத்துக்கும் ஒரு மர்மமான காரணம் தேடும் மனநிலையிலிருந்து இவை உருவாகின. 13 வகையான சாபங்கள் பற்றி சாஸ்திரங்கள் கூறினாலும், அவற்றில் மிகவும் பரவலாக பயமுறுத்தப்பட்டு பேசப்படுவது “பெண் சாபம்”. தலைமுறைகளையும் பாதிப்பதாக மக்கள் நம்பும் இந்த கருத்து, இன்றும் பலரின் மனதில் ஆழமாக பதிந்துள்ளது.
சந்திரன் 6, 8, 12 என்ற இடங்களில் இருந்தால் பெண்களின் சாபம் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த பெண்களுடைய சாபம் இப்பிறவியில் பெரும் அவமானங்களை பெற்று தரும். வாழ்க்கையில் முன்னேறவே விடாது, வாய்ப்புகளை தட்டிப் பறிக்கும், குலம் விருத்தி அடைவதில் தடைகள் ஏற்படலாம். பெண் சாபம் உங்களை மட்டும் அல்லாது உங்களுடைய வாரிசுகளையும் பாதிக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
இதிலிருந்து விடுபட நீங்கள் பட்டுக்கோட்டை அருகில் இருக்கும் அத்திக்கோட்டை என்னும் ஊரில் உள்ள சப்த கன்னி கோவிலுக்கு செல்ல வேண்டும். அங்கு சென்று வழிபட்டு விட்டு வரலாம். இதனால் பெண் சாபம் நீங்குவதாக நம்பிக்கை நிலவுகிறது. மேலும் ஏழு வயதிற்கு குறைவாக இருக்கும் பெண் குழந்தைகளுக்கு வஸ்திர தானம் செய்து வந்தால் பெண்களுடைய சாபம் நீங்குவதாக ஐதீகம் உண்டு.
மேலும் அருகில் இருக்கும் கோவிலில் உள்ள சப்த கன்னிகளுக்கு சர்க்கரை பொங்கல் நைவேத்தியம் படைத்து வழிபட வேண்டும். சப்த கன்னிமார்களுக்கு பாவாடை வாங்கி கொடுத்து அதனை சாற்றி உங்களுடைய பெண் சாபம் தீர மனதார வேண்டிக் கொள்ள வேண்டும். இப்படி செய்து வந்தாலும் ஸ்திரீ சாபங்கள் நீங்குவதாக ஜோதிடங்கள் குறிப்பிடுகிறது.
Read more: நாய் கடியால் இறந்தவர்களுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு! மாநில அரசு அறிவிப்பு!



