பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் இன்றைய எபிசோட்டில் பாண்டியன் வீட்டுக்கு மயிலின் அம்மா, அப்பா வந்ததும் மொத்த குடும்பமும் சேர்ந்து வெளுத்து வாங்குகிறது. ஏமாத்துக்கார குடும்பம். நம்ப வைச்சு கழுத்தை அறுத்துட்டீங்க என்றெல்லாம் ஆதங்கத்தை கொட்டுகிறார்கள். வீட்டில் என்ன நடந்தது என்பதை அறியாத மயிலின் அம்மா அப்பா என்ன விஷயம் சொல்லுங்க என்று கேட்கிறாள். அப்போது கோமதி வயசு விஷயத்தையும், படிப்பையும் பற்றி பேசுகிறாள்.
உடனே மயில் அம்மா இவள் ஏம் ஏ படிச்சு இருக்காள். மாப்பிள்ளையை விட வயசு கம்மி என்று மீண்டும் அதே பொய் புராணத்தை பாடுகிறாள். இதனால் கடுப்பாகும் குழலி, உங்க பொண்ணே அவள் வாயால இந்த விஷயத்தை எல்லாம் ஒத்துக்கிட்டாள் என்று சொல்கிறாள். உடனே மயிலின் அப்பா, அதெல்லாம் பொய்யும்மா. நிஜமாவே மயில் எம் ஏ படிச்சவள் என்கிறான். அதனைக்கேட்டு கோபம் அடையும் சரவணன் இன்னும் இந்தாளு நடிச்சுட்டு இருக்கான் என்று அண்டாவை தூக்கி அடிக்க பாய்கிறான்.
அதன்பிறகு மற்றொரு உண்மையை சரவணன் போட்டு உடைக்கிறான். அப்பா தீபாவளி சமயத்துல கடைல பணம் காணாமல் போச்சுல. அதை மாமா எடுக்கலைப்பா. இந்தாளு தான் எடுத்தாரு என சொல்கிறான். உடனே மயிலின் அப்பா அபாண்டமா பழியை தூக்கி போடாதீங்க மாப்பிள்ளை என்கிறான். உடனே மயில் அம்மா அய்யோ என் மகளை போட்டு இப்படி கொடுமைப்படுத்துறீங்க. இந்த மாதிரி சுத்தி நின்னு கேள்வி கேட்டால் மயில் பயப்படுவாள் என கண்ணீர் வடிக்கிறாள்.
அதன்பின்னர் எங்க பொண்ணுக்கு கல்யாணம் தள்ளி போயிட்டே இருந்தது. அப்போ தான் உங்களை பார்த்தோம். நல்ல குடும்பம்ன்னு ரெண்டு, மூனு பொய் சொல்லி கல்யாணம் பண்ணி வைச்சுட்டோம் என்று செஞ்ச தப்பை நியாயப்படுத்தி பேசுகிறான் மயிலின் அப்பா. உடனே பாண்டியன் மயில் படிக்காதது எனக்கு பிரச்சனையே கிடையாது. நீங்களா தான உங்க பொண்ணு பெரிய படிப்பு படிச்சு இருக்குன்னு சொன்னீங்க.
வயசு விஷயத்தையும் எங்க கிட்ட சொல்லிருந்தால், அதுல எங்களுக்கு சம்மதம் இருந்தால் பேசி இருப்போம்ல. ஆனால் எல்லாத்தையும் மறைச்சு எங்களை நம்ப வைச்சு ஏமாத்தி இருக்கீங்க என்று வேதனையுடன் சொல்கிறான். இதனையடுத்து சரவணன் விஷயத்தில் அவன் எடுக்கப்போகும் முடிவு என்ன என்பதை நாளைய பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட்டில் பார்க்கலாம்.
Read more: உங்களிடம் PF கணக்கு இருக்கிறதா..? இது இல்லையென்றால், சேவைகள் நிறுத்தப்படும்..! EPFO-ன் எச்சரிக்கை..!



