விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தொடரில் தற்போது ஒரு விறுவிறுப்பான சம்பவம் நடந்து வருகிறது. பாண்டியனின் மூத்த மகன் சரவணனின் மனைவி தங்கமயில். பல பொய்களைச் சொல்லிதான் மயிலின் பெற்றொர் இந்த திருமணத்தை நடத்தி வைத்தனர். ஆனால், பாண்டியன் குடும்பத்திற்கு இது எதுவுமே இன்னும் தெரியவரவில்லை.
மயில் அணிந்து வந்த நகை அனைத்து கவரிங் என்ற உண்மை மீனாவுக்கும், ராஜிக்கும் தெரிய வந்தது. ஆனால் அதை அவர்கள் குடும்பத்தினரிடம் சொல்லி பிரச்சனை உண்டு பண்ணவில்லை. ஏம் ஏ இங்கிலீஸ் லிட்டரேச்சர் படித்திருப்பதாக கூறிய தங்க மயில் சரவணிடம் கையும் களவுமாக சிக்கிவிட்டார். ஆனால் சரவணன் இதுபற்றி குடும்பத்தில் யாரிடமும் சொல்லவில்லை. இதன் பின்னரே இருவரின் உறவில் விரிசல் வந்தது.
தங்க மயிலிடன் சரவணன் முகம் கொடுத்து கூட பேசாமல் தவித்து வந்தார். இப்படியான சூழலில் குடும்பத்தினர் அனைவரும் தீபாவளி பண்டிகை கொண்டாட தயாராகி வருகின்றனர். இன்றைய தினம் வெளியான புரோமோவில் தீபாவளி பண்டிகை அன்று பெண்கள் அனைவரும் பலகாரம் செய்து கொண்டிருக்கிறார்கள். அப்போது அரசி அண்ணி நீங்க தீபாவளிக்கு படத்துக்கு போயிருக்கீங்களா என கேட்கிறாள்.
அதற்கு மயில் ஒரே ஒரு முறை தீபாவளிக்கு படத்துக்கு போயிருக்கிறேன். 2010வது வருஷம். அப்போ நா பத்தாவது படிச்சிட்டு இருந்தேன் என்கிறாள். உடனே மீனா அப்போ உங்களுக்கு 30 வயசா என கேட்கிறாள். சுதாரித்துக் கொண்ட மயில் எப்படியோ சமாளிக்கிறாள்.. ஆனால் இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த சரவணனுக்கு சந்தேகம் வருகிறது. மயிலிடம் சென்று உன் ஆதார் கார்டு கொடு என்கிறான்.
வீட்டில் வேலைகள் நிறைய இருக்கு என சொல்லி மயில் நழுவுகிறாள். உடனே மயில் அப்பாவிடம் சென்று, மயிலுக்கு நான் சர்ப்ரைஸ் செய்ய போகிறேன். அவள் ஆதார் கார்டு கொடுங்க என்கிறார். அவரும் கொடுக்கிறார். அப்போது தான் மயில் தன்னை விட மூத்தவள் என்ற உண்மை சரவணனுக்கு தெரிய வருகிறது. வயதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சரவணன் என்ன செய்ய போகிறான் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
Read more: மீனாவிடம் சில்மிஷம் செய்த மர்ம நபர்.. ஹெல்மெட்டால் மண்டையை உடைத்த விஜயகாந்த்..! இதெல்லாம் நடந்திருக்கா..? தயாரிப்பாளர் ஓபன் டாக்..



