மயிலின் அம்மா, அப்பா இருவரும் சீர் கொண்டு பாண்டியன் வீட்டிற்கு வருகிறார்கள். அப்போது சரவணன் வீட்டில் இல்லாமல் கடையில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறான். மயில் அவரை அழைத்தும் போனில் எடுக்கவில்லை. இதனால் பாண்டியன் நேரடியாக அழைக்க, சரவணன் “கடையில் ஆளே இல்லப்பா… டெலிவரியும் நிறைய இருக்கு… மயில் கிட்ட சீர் கொடுத்துட்டு போகச் சொல்லுங்க” என்கிறான்.
இதைக் கேட்ட மயிலின் அம்மா, “உன் புருஷனுக்கு மரியாதை தெரியாதா?” என கேட்கிறாள். அதற்கு மயில், “இங்க மரியாதை மட்டும் தான் குறைச்சல்… இந்த சீருக்கு பணம் எங்கிருந்து வந்தது தெரியுமா?” என பதிலளிக்கிறாள். இதைக் கேட்ட அவளது அப்பா, “ரெண்டு நாள்ல பணத்தை திருப்பி வைச்சுடலாம்மா” என்கிறார்.
இதே நேரத்தில், குமார் அரசியை வழியில் தடுத்து “நீ என்மேல் லவ் இருந்ததால தான் கேஸை வாபஸ் வாங்கினே. உன் குடும்பத்துக்காக பயப்படாதே, நான் இருக்கேன்” என்கிறான். அதற்கு அரசி, “இப்படி எனை தொந்தரவு பண்ணாதீங்க… உங்க முகம் பார்க்கவே பிடிக்கலை” எனக் கடுமையாகச் சொல்லுகிறாள்.
அப்போதே சரியான நேரத்தில் சரவணன் வந்து, குமாரை பலமாக அடித்து “இது உனக்கு கடைசி எச்சரிக்கை. இன்னும் தொந்தரவு பண்ணினா ஜெயிலுக்கு போற நிலைமை வரும்” என எச்சரிக்கிறான். மற்றொரு பக்கம், பழனி சுகன்யாவுக்கு தீபாவளிக்காக சீர் எடுத்து வருகிறான்.
இதைப் பார்த்து ராஜி, “எல்லாருக்கும் சீர் வருது, நமக்கு மட்டும் வரலையே” என வருந்துகிறாள். இதை கவனித்த கோமதி, “நம்ம இப்படி வருத்தப்படுறதால நமக்கு சீர் வராது” எனச் சொல்கிறாள். அதற்கு மீனா, “நான் உனக்கு அக்காதான்… உனக்கே நான் சீர் தரட்டுமா?” எனக் கேட்கிறாள். இதையெல்லாம் பழனி கவனித்துக்கொண்டு இருப்பான்.



