தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் பழம்பெரும் நடிகை சரோஜா தேவி. அவர் இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வந்தவர்.. சரோஜா தேவி 1938-ஆம் ஆண்டு ஜனவரி 7-ஆம் தேதி பிறந்தார். 1955-ம் ஆண்டு வெளியான மகாகவி காளிதாஸ் என்ற கன்னட படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார் சரோஜா தேவி.. 1958- ஆம் ஆண்டு வெளியான நாடோடி மன்னன் என்ற படத்தின் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதை தொடர்ந்து அவருக்கு சினிமாவில் வாய்ப்புகள் குவிய தொடங்கின.. இதனால் குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகையாக மாறினார் சரோஜா தேவி..
கன்னடத்து பைங்கிளி, அபிநய சரஸ்வதி என்று ரசிகர்களால் அழைக்கப்பட்ட சரோஜா தேவி எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் உள்ளிட்ட திரையுலக ஜாம்பான்களுடன் பல்வேறு படங்களில் நடித்தவர். அந்த காலக்கட்டத்தில் பிசியான நடிகைகளில் இவரும் ஒருவர்.. ஒரு நாளில் 18 மணி நேரம் நடிப்பாராம்.. 8 வருடங்களில் 62 படங்களில் கதாநாயகியாக நடித்தது ஒரு உலக சாதனையாக கருதப்படுகிறது.
இந்த நிலையில் சரோஜா தேவி வயது மூப்பு காரணமாக நேற்று முன் தினம் காலமானார். திரையுலக சேர்ந்த பல்வேறு பிரபலங்கள், ரசிகர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் சரோஜா தேவியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர். அவரின் மறைவு திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகவே கருதப்படுகிறது. அவரின் உடல் முழு அரசு மரியாதை உடன், பெங்களூரு அருகே அவரின் சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்த நிலையில் நடிகை சரோஜா தேவியின் கண் தானம் செய்யப்பட்டது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.. இறந்த பிறகும் ஒளியாக இருக்கவே நடிகை சரோஜா தேவி விரும்பினார். தனது கண்களை தானமாக வழங்கி, பிறருக்கு பார்வையாக இருக்க வேண்டும் என்பதே அவரின் கடைசி ஆசையாக இருந்துள்ளது. நேற்று அவரின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட போதே, மருத்துவர்கள் அவரின் கண்களின் கார்னியாவை தானமாக பெற்றுக் கொண்டனர். தற்போது அவை 2 குழந்தைகளுக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டுள்ளது. இறந்த பிறகும் சரோஜா தேவியின் கண்கள் இந்த உலகை பார்க்க உள்ளது. இதன் மூலம் சரோஜா தேவியின் கடைசி ஆசை நிறைவேறி உள்ளது..
Read More : “ஜெயலலிதாவுக்கு மகள் இருந்தது உண்மை தான்.. ஆதாரம் இருக்கு..” பிரபலம் பகீர் தகவல்..