அதிமுக முன்னாள் அமைச்சரும், மூத்த தலைவருமான செங்கோட்டையன், ஈரோடு கோபிச்செட்டிபாளையம் அருகே தனது ஆதரவாளர்களுடன் செங்கோட்டையன் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.. இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் “ வரும் 5-ம் தேதி அன்று கோபிச்செட்டிப்பாளையம் கழக அலுவலகத்தில் நான் மனம் திறந்து பேசப் போகிறேன்.. அப்போது என்ன கருத்துகளை சொல்கிறேன் என்பதை தெரிந்து கொள்ளலாம்.. அதுவரை பொறுத்திருங்கள்..” என்று தெரிவித்தார்.
இதனால் அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் விலக இருப்பதாக தகவல்கள் வெளியானது.. எனினும் அதிமுகவில் இருந்து அவர் விலக மாட்டார் என்று கூறப்படுகிறது..
இந்த நிலையில் செங்கோட்டையன் வரும் 5-ம் தேதி என்ன பேச போகிறார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.. 2026 சட்டமன்ற தேர்தலின் போது அதிமுகவில் பிரிந்து கிடக்கும் சக்திகள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.. அதாவது சசிகலா, ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோர் தனித்தனியாக இருப்பதால் முக்குலத்தோர் சமுதாய வாக்குகள் அதிமுகவிற்கு கிடைக்காது.. அதிமுகவின் பலமே தென் மாவட்டங்கள் தான்.. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் இருந்த போது தென் மாவட்ட வாக்குகள் அதிமுகவிற்கு பெரிய அளவில் கை கொடுத்துள்ளன..
ஆனால் 2021 சட்டமன்ற தேர்தல், 2024 மக்களவை தேர்தலில் தென் மாவட்டங்களில் அதிமுக பல இடங்களில் தோல்வி அடைந்துள்ளது.. எனவே அதிமுக தனித்தனியாக பிரிந்திருக்கும் போது, வாக்குகளை பிரிக்கப்படுவதால், அது அதிமுகவின் வெற்றியை பாதிக்கிறது என்பது செங்கோட்டையனின் கருத்தாக உள்ளதாம்.. இதுகுறித்து தான் செங்கோட்டையன் வரும் 5-ம் தேதி மனம் திறந்து பேச உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன..
எனவே தாங்கள் அனைவரும் உருவாக்கிய ஒரு மாபெரும் கட்சி தங்கள் கண் முன்னே அழிவை பார்க்க முடியாது.. 2026 தேர்தலை விட்டுவிட்டால், அதன்பின்னர் அதிமுக மீண்டெழுவது என்பது இயலாத காரியம்.. அனைவரும் ஒன்றிணைந்தால் தான் அதிமுகவும் அதிமுக தொண்டர்களும் மகிழ்ச்சி அடைய முடியும் என்று செங்கோட்டையன் நினைப்பதாக அவரின் ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்..
ஏற்கனவே ஒருங்கிணைந்த அதிமுகவுக்காக ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் எந்த நிபந்தனையுமின்றி கட்சியில் இணைய தயாராக உள்ளனர்.. ஆனால் இபிஎஸ் தான் அவர்களை சேர்க்கமாட்டேன் என்று உறுதியாக இருந்து வருகிறார்.. இந்த சூழலில் அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என்ற செங்கோட்டையனின் இந்த முயற்சி எந்தளவுக்கு கைகொடுக்கும்? இபிஎஸ் இதற்கு ஒப்புக்க்கொள்வாரா? என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்..



