சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: அப்ரூவராக ஆஜரான இன்ஸ்பெக்டர்.. நடந்தது என்ன..?

sathankulam police inspector witness 11zon

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் ஸ்ரீதர் அப்ரூவராக மாறுவதற்கு சிபிஐ கடும் எதிர்ப்பு தெரிவித்தது.


துாத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸை கடந்த 2020 ம் ஆண்டு ஜூன் 19ம் தேதி விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தாக்கினர். இருவரும் கோவில்பட்டி கிளை சிறையில் இறந்தனர். சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்.ஐ.,க்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் உட்பட 9 போலீசார் மீது சி.பி.ஐ., கொலை வழக்கு பதிந்தது.

மதுரை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடக்கிறது. அதன்படி, இந்த 9 பேரின் மீது சிபிஐ தரப்பில் முதற்கட்டமாக 2027 பக்கம் குற்றப்பத்திரிகையும், இரண்டாம் கட்டமாக கூடுதலாக 400 பக்கம் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் 3 ஆண்டுகளுக்கு மேலாக இந்த வழக்கு நடைபெற்று வருகிறது.

இந்த வழக்குகளில் 105 சாட்சிகளில் 52 சாட்சிகள் மட்டுமே விசாரிக்கலாம் என நீதிமன்றத்தில் சிபிஐ எழுத்துப்பூர்வமாக தெரிவித்து 52 பேரிடம் தற்போது வரை சாட்சிய விசாரணை நடைபெற்று வந்தது. இருப்பினும், ஸ்ரீதர் 7வது முறை தாக்கல் செய்த ஜாமின் மனுவை உயர்நீதிமன்ற கிளை தள்ளுபடி செய்தது.

இந்தநிலையில், மதுரை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில், நீதிபதி முத்துக்குமரன் முன் வழக்கு விசாரணைக்கு வந்தது. ஸ்ரீதர் தரப்பு தாக்கல் செய்த மனுவில், ‘ குற்றம் செய்தவர்களுக்கு தண்டனை கிடைக்க வேண்டும். ‘அரசு, காவல் துறைக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்பதற்காக நான் அப்ரூவராக மாற விரும்புகிறேன். என்னை தவிர்த்து, மற்ற போலீசார் சம்பவத்தின் போது செய்த செயல்கள் குறித்த உண்மையை நீதிமன்றத்தில் தெரிவிக்க விரும்புகிறேன்.

‘தந்தை, மகனை இழந்த குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டும். அரசு தரப்பு சாட்சியாக மாற விரும்புகிறேன்’ என, குறிப்பிட்டுள்ளார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது, அப்போது ஸ்ரீதர் அப்ரூவராக மாறுவதற்கு சிபிஐ கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அதேபோன்று கொலை செய்யப்பட்ட ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Read more: கிரெடிட் கார்டு மூலம் ATM-இல் பணம் எடுக்கிறீர்களா..? இந்த விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்!

Next Post

இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணப் பற்றாக்குறை என்றால் என்னவென்றே தெரியாது! பணம் சேர்ந்து கொண்டே இருக்குமாம்..

Thu Jul 24 , 2025
ஜோதிடத்தின்படி, சில ராசிக்காரர்கள் பிறப்பிலிருந்தே அதிர்ஷ்டசாலிகள் என்று கருதப்படுகிறது.. இவர்களுக்கு பணப் பற்றாக்குறை ஏற்படாது. கிரகங்களின் நிலை மற்றும் ராசியின் தன்மை காரணமாக, அவர்கள் பணம் சம்பாதிப்பதிலும் சேமிப்பதிலும் வெற்றி பெறுகிறார்கள். இந்த ராசிக்காரர்களுக்கு லட்சுமி தேவியின் அருள் எப்போதுமே இருக்குமாம்.. அத்தகைய 5 அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார் யார் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.. ரிஷபம்: இந்த ராசியின் அதிபதி சுக்கிரன். சுக்கிரன் செல்வம், ஆடம்பரம் மற்றும் அழகின் […]
Purse Astroogy 2025 01 029d2a1bfa70bfdbc47d9ed156499089 1

You May Like