SBI வங்கியில் கொட்டிக் கிடக்கும் காலியிடங்கள்..!! லட்சங்களில் சம்பளம்..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

SBI Job 2025 1

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI), தற்போது சிறப்பு அதிகாரி (Specialist Cadre Officer – SO) பிரிவில் மொத்தம் 996 பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


பதவி மற்றும் காலியிடங்கள் :

VP Wealth (SRM) – 506

AVP Wealth (RM) – 206

Customer Relationship Executive (CRE) – 284

கல்வித் தகுதி : அனைத்துத் தேர்வுகளுக்கும் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு கட்டாயம். MBA (Banking/Finance/Marketing) போன்ற உயர் படிப்புகள் கூடுதல் மதிப்பைத் தரும். அத்துடன், CFP, CFA, NISM போன்ற சான்றிதழ்கள் வைத்திருப்பவர்களுக்குத் தேர்வில் முன்னுரிமை வழங்கப்படும்.

VP Wealth (SRM): குறைந்தபட்சம் 6 ஆண்டுகள் வங்கி அல்லது வெல்த் மேனேஜ்மென்ட் துறையில் அனுபவம் தேவை.

AVP Wealth (RM): குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் அனுபவம் (அல்லது SBI Wealth CRE-க்களுக்கு 4 ஆண்டுகள் அனுபவம்) அவசியம்.

Customer Relationship Executive (CRE): ஆவணப் பணிகளில் அனுபவமும், சிறந்த தகவல் தொடர்புத் திறனும் இருந்தால் போதுமானது.

வயது வரம்பு மற்றும் ஆண்டு சம்பளம் :

* VP Wealth (SRM) பணிக்கு 26 முதல் 42 வரை இருக்க வேண்டும். ஆண்டு சம்பளம் ரூ. 44.70 லட்சம்.

* AVP Wealth (RM) பணிக்கு 23 முதல் 35 வரை இருக்க வேண்டும். ஆண்டு சம்பளம் ரூ. 30.20 லட்சம்.

* CRE பதவிக்கு 20 முதல் 35 வரை இருக்க வேண்டும். ஆண்டு சம்பளம் ரூ. 6.20 லட்சம்.

தேர்வு நடைமுறை :

* விண்ணப்பங்கள் தகுதி அடிப்படையில் ஆரம்ப கட்ட சோதனைக்கு உட்படுத்தப்படும்.

* நேரடியாகவோ, தொலைபேசி மூலமாகவோ அல்லது வீடியோ மூலமாகவோ நேர்முகத் தேர்வு நடத்தப்படும்.

* இறுதியாக, சம்பளம் (CTC) குறித்த பேச்சுவார்த்தை நடைபெறும்.

விண்ணப்பக் கட்டணம் : SC / ST / PwBD பிரிவினர் கட்டணம் செலுத்தத் தேவையில்லை. மற்ற பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் ₹750 கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://sbi.bank.in/ மூலம் 23.12.2025-க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

Read More : ஒரு லிட்டர் ஆவின் நெய் எவ்வளவு தெரியுமா..? அதிரடியாக உயர்ந்த விலை..!! அதிர்ச்சியில் மக்கள்..!!

CHELLA

Next Post

சித்திரவதை செய்த காதல் கணவன்.. பாத்ரூமில் இளம்பெண்.. எந்த பெற்றோரும் பார்க்கக் கூடாத கோலம்..!!

Wed Dec 3 , 2025
Woman commits suicide due to dowry harassment in Guntur, Andhra Pradesh
ias officer daughter commits death in guntu

You May Like