SBI வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு.. ரூ.85,920 வரை சம்பளம்..!! செம சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க..

bank job 1

இந்தியாவின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) அசிஸ்டெண்ட் மேனேஜர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 


பணி விபரம்:  541 காலிப்பணியிடங்கள்

கல்வித் தகுதி: விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதாவது ஒரு இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். 30.09.2025 தேதிக்குள் படிப்பை முடித்து விடக்கூடிய இறுதி ஆண்டும் மாணவர்களும் இதற்கு விண்ணப்பிக்க முடியும்.

வயது வரம்பு: 01.04.2025 தேதிப்படி விண்ணப்பதாரர் 21 வயது நிறைவடைந்தவராகவும், 30 வயதிற்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும். அரசு விதிகளின் படி எஸ்சி / எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் சலுகை உள்ளது.

சம்பள விபரம்: தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.48,480 முதல் ரூ.85,920 வரை சம்பளம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முறை: இந்த பணிக்கு விண்ணப்பிப்பவர்களிலிருந்து முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர். ஜூலை – ஆகஸ்ட் மாதத்தில் முதல்நிலைத் தேர்வு நடைபெறும். முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் செப்டம்பர் மாதத்தில் நடைபெறும் முதன்மைத் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர். முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் அக்டோபர் – நவம்பரில் நடைபெறும் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் https://sbi.co.in/web/careers/current-openings என்ற எஸ்பிஐயின் அதிகாரப்பூர்வ வலைப்பக்கம் அல்லது https://ibpsonline.ibps.in/sbipomay25/ என்ற வலைப்பக்கம் மூலம் 14.07.2025 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

Read more: நிகிதா ரூ.25 லட்சம் மோசடி செய்தது அம்பலம்.. அஜித் மரண வழக்கில் எழும் பல கேள்விகள்.. ஆனால் பதில்..?

English Summary

SBI Bank Job Opportunity; 541 vacancies; Apply Now!

Next Post

இந்தியாவில் முதல் UPI கிரெடிட் அறிமுகம்.. UPI வங்கி கிளையை தொடங்கிய slice நிறுவனம்...

Thu Jul 3 , 2025
ஸ்லைஸ் நிறுவனம் இந்தியாவில் முதல் UPI கிரெடிட் கார்டு மற்றும் UPI வங்கி கிளையை அறிமுகப்படுத்துகிறது. ஒவ்வொரு இந்தியருக்கும் வங்கிச் சேவையை அணுகக்கூடியதாக மாற்றும் நோக்கத்துடன், ஸ்லைஸ் (slice) யுபிஐ கிரெடிட் கார்டை அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது., இது இந்தியாவில் கடன் அணுகலில் புரட்சியை ஏற்படுத்தும் ஒரு புரட்சிகரமான தயாரிப்பாகும். கூடுதலாக, ஸ்லைஸ் இந்தியாவின் முதல் யுபிஐ-இயங்கும் நேரடி வங்கி கிளை மற்றும் ஏடிஎம்மைத் திறந்து வைத்துள்ளது, எளிமை மற்றும் […]
Slice Credit Card Review 1

You May Like