ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்கு எப்போதும் புதிய வசதிகளை கொண்டு வருகிறது. முன்பு நாம் ஒவ்வொரு வேலைக்கும் வங்கிக்குச் செல்ல வேண்டியிருந்தது, ஆனால் இப்போது வீட்டில் உட்கார்ந்து வங்கியின் பல சேவைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். தற்பொழுது அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய வசதியில் வீட்டில் இருந்தபடியே உங்கள் வாட்ஸ்அப்பில் இப்போது புதிய சேவைகள் பெற முடியும்.

இது குறித்து வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு ட்விட்டர் பக்கத்தில்; இப்போது உங்கள் வங்கி வாட்ஸ்அப்பில் கிடைக்கிறது. இதன் மூலம் உங்கள் கணக்கு இருப்பை நீங்கள் சரிபார்க்கலாம். இது தவிர, மினி ஸ்டேட்மெண்ட்டையும் பார்க்கலாம். இதனுடன் மேலும் பல வகையான தகவல்கள் கிடைக்கின்றன என்று ட்வீட் செய்துள்ளது.
இந்த சேவைகளைப் எப்படி பெறுவது…?
வாட்ஸ்அப் வங்கி சேவையைப் பயன்படுத்த, முதலில் உங்கள் எண்ணைப் பதிவு செய்ய வேண்டும்.
இதற்கு WAREG என டைப் செய்து கணக்கு எண்ணை எழுதி அனுப்ப வேண்டும். எடுத்துக்காட்டாக WAREG கணக்கு எண்ணை எழுதி 7208933148 என்ற எண்ணுக்கு SMS அனுப்பவும். வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள அதே எண்ணிலிருந்து SMS அனுப்ப வேண்டும்.
உங்கள் தொலைபேசியில் 9022690226 எண்ணைச் சேமிக்கவும். சேமித்த பிறகு, இந்த எண்ணுக்கு ஹாய் என்று அனுப்பவும்.
வங்கி மூன்று விருப்பங்களை அனுப்பும் – கணக்கு இருப்பு, மினி ஸ்டேட்மெண்ட் மற்றும் வாட்ஸ்அப் வங்கியிலிருந்து பதிவு நீக்கம் உள்ளிட்ட ஆப்ஷன்கள் உங்களுக்கு கொடுக்கப்படும். உங்கள் தேவைக்கேற்ப விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.