மகாராஷ்டிர மாநிலம் கல்யாண் நகரில் 17 வயது சிறுமி ஒருவர் அங்குள்ள பள்ளியில் பயின்று வருகிறார். இந்த மாணவி பிரபல சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமை பயன்படுத்தி வந்துள்ளார். அப்போது, ஒரு உறவினரிடமிருந்து நண்பர் கோரிக்கை (friend request) வந்தது. அதை ஏற்றுக்கொண்ட மாணவி, அவருடன் பேச தொடங்கியுள்ளார். நாளடைவில், அந்த நபர் மற்றொரு நபரையும் அறிமுகப்படுத்த, இருவருடனும் அந்த மாணவி நெருங்கி பழகியுள்ளார்.
பின்னர், அந்த மாணவியுடன் இருவருமே உல்லாசமாக இருந்துள்ளனர். அப்போது, ரகசியமாக வீடியோ பதிவு செய்துள்ளனர். பின்னர், அந்த வீடியோவை வைத்து மிரட்டி, மேலும் 6 பேர் அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இந்த கொடூர சம்பவத்தால் மாணவி கர்ப்பமாகி, பின்னர் கருச்சிதைவும் ஏற்பட்டுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி, ஒரு உறவினர் மூலம் அந்த மாணவியின் தந்தைக்கு தெரிய வந்துள்ளது.
இதையடுத்து, தந்தையும் மகளும் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் பாரதிய நியாய சன்ஹிதா, போக்சோ சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். தலைமறைவாக உள்ள மற்றொரு குற்றவாளியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் அங்கு பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.