கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராகவும், கிரிக்கெட் பயிற்சியாளராகவும் பணியாற்றி வந்த ஏ.பி.வி. மேத்யூ மீது பாலியல் புகார் அளிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொனனகுண்டே காவல் நிலையத்தில் இளம் பெண் ஒருவர் அளித்த புகாரில், மேத்யூ தனது செல்போனில் 2,500-க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்களை வைத்திருந்ததுடன், தன்னையும் பாலியல் பலாத்காரம் செய்ததாக குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல் மேத்யூ, பல பெண்கள் மற்றும் இளம் மாணவிகளுடன் உல்லாசமாக இருந்ததை ரகசியமாக வீடியோ எடுத்து வைத்துள்ளார். மேலும், அந்த வீடியோவை காட்டி அவர்களை மீண்டும் மீண்டும் பலாத்காரம் செய்து வந்துள்ளார். இதனால், மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அந்த இளம்பெண் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
அதேபோல், இந்த விவகாரம் தொடர்பாக, அந்த இளம்பெண் கர்நாடக மாநில மகளிர் ஆணையத்திலும் புகார் அளித்துள்ளார். இதனால், வழக்குப்பதிவு செய்த போலீசார், மேத்யூவை தேடி வரும் நிலையில், இதையறிந்த அவர் தலைமறைவாக உள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில், ஹாசன் முன்னாள் எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா தொடர்பான ஆபாச வீடியோ விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்த சம்பவம் மீண்டும் ஒரு அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.