திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே அரசு பள்ளி மாணவிகள் அடுத்தடுத்து மயக்கம் அடைந்ததாதால் பரபரப்பு நிலவியது..
கும்மிடிப்பூண்டியை அடுத்த சித்தராஜ கண்டிகையில் அரசு உயர்நிலை பள்ளி இயங்கி வருகிறது. வழக்கம் போல் இன்று பள்ளியில் மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வந்தனர்.. இந்த நிலையில் இன்று மதிய உணவு இடைவேளைக்கு பிறகு, திடீரென மாணவிகளிடையே மூச்சுத்திணறல், இருமல் போன்ற பிரச்சனைகளால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்..
தொடர்ந்து 10-ம் வகுப்பு படிக்கும் 4 மாணவிகள் சுவாசிக்க முடியாமல் திணறிய நிலையில் அடுத்தடுத்து மயக்கம் அடைந்தனர்.. இதனால் அதிர்ச்சி அடைந்த சக மாணவர்களும் ஆசிரியர்களும் 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக ஆம்புலன்ஸ் பள்ளிக்கு வந்த நிலையில் மயக்கமடைந்த 4 மாணவிகளும் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.. அவர்களுக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.. பள்ளியை சுற்றி உள்ள தொழிற்சாலையில் இருந்து நச்சு வாயு வெளியேறியதால் மாணவிகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டிருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன..
இதுதொடர்பாக பல முறை மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் பல முறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.. கும்மிடிப்பூண்டி சுற்றுவட்டார பகுதிகளில் மட்டும் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி இல்லாமல் சுமார் 100க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.. இந்த தொழிற்சாலைகளை முறையாக உரிய வழிகாட்டுதல்களுடன் இயக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்..