கோடை விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிகள் திறப்பு!. ஆசிரியர்களும், மாணவர்களும் செய்யவேண்டியவை!

schools re open 11zon

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து இன்றுமுதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இந்தநிலையில், மீண்டும் எல்.கே.ஜி முதல் 7 வயது குழந்தைகள் வரை இந்த வயது குழந்தைகளுக்கு எல்லாமே ஒரு புது அனுபவம் தான். இது ஒரு ஆபத்து, இயற்கை சீற்றம் என்று உணர்வதற்கான பக்குவம் கூட இல்லாத வயது இது. இந்த புது அனுபவம் அவர்களுக்கு இருந்த சந்தோஷமான சூழ்நிலையை மாற்றியமைத்திருக்க வாய்ப்புகள் அதிகம்.


இதனால் பயம், இரவு நேரத்தில் அச்சம், அழுகை அத்தியாவசிய பொருட்கள் இல்லாது ஏற்படும் பய உணர்ச்சி என்று பல பிரச்சனைகள் அவர்களின் மனதில் இருக்கும்.”பள்ளி குழந்தைகளின் பாடமும், அவர்கள் படிக்கும் விதமும் ஒவ்வொரு வகுப்பிற்கு ஏற்ப மாறுப்படுகிறது. அந்தந்த வயது அல்லது வகுப்பிற்கு தகுந்தாற் போல் அவர்களை பிரித்து சரியான வழிமுறைகளை பள்ளியும், ஆசிரியர்களும் கடைப்பிடிப்பது நல்லது.

இந்த நிலையில் பெற்றோர்கள் சில சின்ன விஷயங்களை செய்து, வீட்டிலிருந்த இயல்பு நிலையை குழந்தைகளுக்கு மீண்டும் கொண்டுவர வேண்டும். இது போன்ற ஆபத்தான சூழலில் பதட்டமடைந்த பெற்றோர்கள் குழந்தைகளின் மேல் தங்கள் கோபத்தை காட்டியிருக்கவும் வாய்ப்புகள் அதிகம். இது ஒரு பயத்தையும், இதுவரை தாங்கள் பார்த்திராத பெற்றோர்களின் குணத்தைக் கண்டு அஞ்சியிருப்பார்கள். இதை புரிந்து கொண்டு பெற்றோர், வீட்டில் மீண்டும் சந்தோஷமான சூழ்நிலையை குழந்தைகளுக்கு ஏற்படுத்தித் தருவது இங்கு அவசியமாகிறது.

அவர்களை இசை அல்லது வரைதல் போன்றவற்றில் கவனம் செலுத்துமாறு அறிவுரைக்கலாம். ஏதாவது ஒரு விஷயத்தை வரைந்து வண்ணம் தீட்டுதல் போன்ற ஆக்டிவிட்டீஸ் செய்ய வைப்பது, குழந்தைகளின் மனதில் இருக்கும் பாதிப்புகளை நீக்க ஒரு வடிகாலாக இருக்கும். தவிர, அவர்களோடு பேசுவது, பிடித்த உணவை தருவது, கதைகள் சொல்லுவது போன்ற சந்தோஷமான செயல்கள் மூலமும், அவர்களுடைய பயத்தை நீக்கலாம்.

ஆசிரியரின் பங்கு; குறைந்தது ஒரு வாரம் வரை, பாடங்களை விரைவாக ஆரம்பிக்காமல் சில விளையாட்டுகளை அவர்களுக்கு அறிமுகப்படுத்தலாம். தொடர் மழை மற்றும் நடைமுறை சிக்கல் பரவலாக இருந்ததால் வெளி விளையாட்டுகளை தவிர்த்திருப்பார்கள். அவுட்டோர் விளையாட்டுகள் குழந்தைகளின் மனநிலையை பெருமளவில் மாற்றும். ஒரு மாத கால தொடர் விடுமுறை காரணத்தால், ஒரு அளவிற்கு மேல் பாடங்களை குழந்தைகள் மறந்திருப்பார்கள்.

மெதுவாக, பழைய பாடங்களை மீண்டும் ரிவைஸ் செய்து அவர்களுடைய ஞாபகத்தில் கொண்டுவருவது மிக அவசியம். சில குழந்தைகள் அதிகக் கோபப்படுவது, பிடிவாதமாக இருப்பது போன்ற தங்களுடைய குணங்களில் மாற்றம் ஏற்பட்டிருக்கும். அது போன்ற குழந்தைகளுடன் ஆசிரியர் உடன் உட்கார்ந்து பேசி தன்னம்பிக்கை அளிப்பது அவர்களை பழைய நிலைக்கு கொண்டு வர உதவும்.

Readmore: கட்சியில் இரண்டு புதிய அணிகள் உருவாக்கம்..!! திமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட 27 தீர்மானங்கள் என்னென்ன..? 

KOKILA

Next Post

Rain Alert: இன்று முதல் வரும் 7-ம் தேதி வரை மழை... மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்...!

Mon Jun 2 , 2025
தமிழகத்தில் இன்று முதல் வரும் 7-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் நிலவும் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழையும், வரும் 3 முதல் 7-ம் தேதி வரை […]
rain 1

You May Like