850,000 ஆண்டுகளுக்கு முன்பு பண்டைய மனிதர்கள் சிறு குழந்தைகளை சாப்பிட்டதற்கான ஆதாரங்களை ஸ்பெயினில் உள்ள தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். வடக்கு ஸ்பெயினின் அட்டாபுர்காவில் உள்ள கிரான் டோலினா குகை தளத்தில் இந்த கொடூரமான கண்டுபிடிப்பு நடந்துள்ளது.. அங்கு விஞ்ஞானிகள் ஒரு மனித கழுத்து எலும்பைக் கண்டுபிடித்துள்ளனர்.. இந்த எலும்புகள் சிறியதாக இருந்தது.. எனவே அவை 2 முதல் 4 வயதுக்குட்பட்ட ஒரு குழந்தையின் எலும்பாக இருந்திருக்கலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்..
ஆராய்ச்சியாளர்கள் அந்த எழுப்பில் கொலை செய்யப்பட்டதற்கான அடையாளங்களைக் கண்டறிந்தனர்.. மேலும் குழந்தை கொடூரமாக சித்ரவதை செய்யப்பட்டு, நரமாமிசமாக உண்ணப்பட்டதற்கான தெளிவான அறிகுறிகள் என்று அவர்கள் கூறுகிறார்கள். காடலான் மனித பழங்காலவியல் மற்றும் சமூக பரிணாம நிறுவனத்தின் (IPHES) ஆராய்ச்சியாளர்கள் குழு 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த இடத்தில் பணியாற்றி வருகிறது.
கழுத்து எலும்பைத் தவிர, வேறு சில எலும்புகள் மற்றும் பற்களையும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். அந்தக் குழந்தை ஒரு ஹோமோ முன்னோடி.. அதாவது இது ஹோமோ சேபியன்களுக்கும் (நவீன மனிதர்கள்) நியாண்டர்தால்களுக்கும் இடையிலான கடைசி இணைப்பாக இருந்த ஒரு இனமாகும். பல ஆண்டுகளாக கண்டுபிடிக்கப்பட்ட பல எலும்புகளில் வெட்டு அடையாளங்கள் உள்ளன. எனவே நமது மூதாதையர்கள் நரமாமிசம் உண்பவர்கள் என்றும் அவர்கள் குழந்தைகளை சாப்பிட்டார்கள் என்றும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் உறுதியாக நம்புகின்றனர்.
கிரான் டோலினா அகழ்வாராய்ச்சியின் இணை இயக்குனர் டாக்டர் பால்மிரா சலாடி இதுகுறித்து பேசிய போது “ இந்த ஆராய்ச்சி மிகவும் குறிப்பிடத்தக்க மைல்கல்.. குழந்தையின் வயது மட்டுமல்ல, வெட்டுக் குறியின் துல்லியமும் அதற்கு முக்கிய காரணமாகும். எலும்பில் இருக்கும் தெளிவான கீறல்கள், குழந்தை மற்ற இரையைப் போலவே பதப்படுத்தப்பட்டதற்கான நேரடி சான்றாகும்.” என்று தெரிவித்தார்.
குழந்தைகள் மட்டுமல்ல, பல பெரியவர்களின் எலும்புகளும் அந்த இடத்தில் தோண்டி எடுக்கப்பட்டன.. இந்த எழும்புகள் மனிதர்களால் உண்ணப்பட்டு நிராகரிக்கப்பட்ட விலங்குகளின் எலும்புகளைப் போலவே பல சிதைவு அடையாளங்களைக் கொண்டுள்ளன.
தொடர்ந்து பேசிய டாக்டர் சலாடி ” கழுத்து எலும்பை ஆய்வு செய்த குழந்தையின் தலை துண்டிக்கப்பட்டதை காட்டியது. எலும்புகளில் உள்ள வெட்டுக் குறிகள் தனித்தனியாகத் தெரியவில்லை. எலும்புகளில் மனித கடி அடையாளங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.. அந்த இடத்தில் கண்டெடுக்கப்பட்ட உடல்கள் உண்மையில் சாப்பிடப்பட்டதற்கான மிகவும் நம்பகமான சான்று இது.” என்று கூறினார்.
ஒரு குழந்தை மனிதர்களால் உண்ணப்பட்டதற்கான ஆதாரங்களைக் கண்டுபிடித்த விஞ்ஞானிகள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஹோமோ முன்னோடி இன மனிதர்கள் 1.2 மில்லியன் முதல் 800,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தனர்.. அவர்களின் உடல் அமைப்பு நவீன மனிதர்களை விடக் குறைவாகவும், தடிமனாகவும் இருந்தது. அவற்றின் மூளையின் அளவும் இன்றைய மனிதனை விட மிகக் குறைவாக இருந்தது.
தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் இந்த இனம் வலது கை பழக்கம் கொண்டதாக இருந்ததாகவும், ஒரு குறியீட்டு மொழியைப் பயன்படுத்தியதாகவும் நம்புகிறார்கள். மனிதர்களிடம் நரமாமிசம் பழக்கம் இருந்தது இதற்கு முன்பு கென்யாவில் கண்டுபிடிக்கப்பட்டது, இது 1.45 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது. பல்வேறு இனங்கள், அடக்கம் செய்யும் முன்பு, இறந்தவர்களை சாப்பிட்டதாக சில நிபுணர்கள் நம்புகின்றனர். இங்கிலாந்திலும் நரமாமிசம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள சோமர்செட்டில் உள்ள செடார் பள்ளத்தாக்கில் மண்டை ஓடுகள் கண்டுபிடிக்கப்பட்டப்பட்டது.. இவை கோப்பைகளாகப் பயன்படுத்தப்படும் மண்டை ஓடுகள் என்பதும் கண்டறியப்பட்டது..