கொளுத்தும் கோடை வெயில்!… ஐரோப்பாவில் 15000 பேர் பலி!… WMO அதிர்ச்சி ரிப்போர்ட்!

அதிக வெப்பநிலை காரணமாக ஐரோப்பாவில் கடந்த 3 மாதத்தில் 15000 பேர் பலியாகியுள்ளதாக உலக வானிலை அமைப்பு அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளது.


உலகின் பல பகுதிகளில் கோடைகாலம் தொடங்கியுள்ளது. சீசன் தொடங்கியது முதலே பல நாடுகளில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. மேலும், இதுவரை இருந்ததைவிட தற்பொழுது வெப்பம் அதிகமாக உள்ளது. இந்தநிலையில், உலக வானிலை அமைப்பு (WMO) புதிய வருடாந்திர காலநிலை அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், கடந்த ஆண்டு ஐரோப்பாவில் ஏற்பட்ட அசாதாரண வெப்பம், பல நாடுகளில் பதிவு செய்யப்பட்ட வெப்பநிலையை விட அதிகமாக இருந்தது என்றும் இந்த வெப்பநிலையால் குறைந்தது 15,000 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த 2022ம் ஆண்டில் கோடை காலத்தில், ஸ்பெயினில் சுமார் 4,600 பேர், ஜெர்மனியில் 4,500 பேர், ஐக்கிய இராச்சியத்தில் 2,800 பேர், பிரான்சில் 2,800 பேர் மற்றும் போர்ச்சுகலில் 1,000 பேர் அதிக வெப்பநிலையால் இறந்துள்ளதாகவும் உலக வானிலை அமைப்பு தெரிவித்துள்ளது.

அதுமட்டுமல்லாமல், உலகெங்கிலும் உள்ள 95 மில்லியன் (9.5 கோடி) மக்கள் ஏற்கனவே காலநிலை மாற்ற காரணங்களால் இடம்பெயர்ந்துள்ளனர் என்று அறிக்கை கூறுகிறது. “காலநிலை அல்லது வானிலை தொடர்பான நிகழ்வுகளில் இடம்பெயர்ந்த பெரும்பாலான மக்கள் அவர்கள் வசிக்கும் பகுதியிலேயே இருந்தனர், சில சூழ்நிலைகளில் மக்கள் பாதுகாப்பு மற்றும் உதவியைத் தேடி மற்றொரு இடத்திற்கு செல்லவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பாவின் பல பகுதிகள் கடந்த 2022ம் ஆண்டு இதுவரை இல்லாத அளவுக்கு முதன்முறையாக 40-க்கும் மேற்பட்ட டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது குறிப்பிடத்தக்கது.

KOKILA

Next Post

அடேங்கப்பா!... இத்தனை விதமான உணவுகளா?... ஒவ்வொரு வகுப்பினருக்கும் ஒவ்வொரு ரகம்!... வைரலாகும் டைட்டானிக் மெனு!

Sun Apr 23 , 2023
டைட்டானிக் கப்பலில் பயணிகள் சாப்பிட்ட உணவுகளின் பட்டியல்(மெனு கார்டு) வெளியாகி சமூக வலைதலங்களில் ட்ரெண்டாகி வருகிறது. உலகிலேயே முதன் முதலாகத் தயாரிக்கப்பட்ட சொகுசு கப்பலான ‘டைட்டானிக்’ 1912 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15ஆம் திகதியன்று அதிகாலை 2.19 மணியளவில் எதிர்பாராத விதமாகப் பனிப்பாறையில் மோதி நீரில் மூழ்கியது. இந்த விபத்தில், 1500 பேர் உயிரிழந்தனர்.1160 பேரை காணவில்லை. 705 பேர் உயிர் பிழைத்தனர். டைட்டானிக் கப்பல் மூழ்கி 100 […]
titanic menu card

You May Like