தனக்கு எதிராக போராடிய மாதர் சங்கம் ரித்ன்யா விவகாரத்தில் எங்கு சென்றது என சீமான் கேள்வி எழுபியுல்ள்ளார்.
காமராஜர் பிறந்தநாளையொட்டி மரியாதை செலுத்திய சீமான், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் பேசியதாவது; “உங்களுடன் ஸ்டாலின் சரி, இவ்வளவு நாட்கள் அவர் யாருடன் இருந்தார்? மக்களுடன் இல்லையா? இப்போது வீடு தேடி அரசு போகிறது. இவ்வளவு நாட்கள் யாரைத் தேடி அரசு போனது? பாஜக என்று ஒன்று இல்லையென்றால் தி.மு.க என்ற கட்சி அழிந்து 20 வருடம் ஆகியிருக்கும்.
தனக்கெதிராக திரண்டு வந்து போராட்டம் நடத்தும் பெண்ணிய அமைப்புகள் சகோதரி ரிதன்யா தற்கொலை விவகாரத்தில் வாய்திறக்காமல் இருப்பது ஏன்? வாழ வேண்டிய ரிதன்யா, வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ளார். அதற்காக பேசிய மாதர் சங்கங்கள், மகளிர் அமைப்புகள், மனித உரிமை ஆர்வலர்கள், முற்போக்கு சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள், பெண்ணியவாதிகள் எல்லாம் எங்கே போய் படுத்துள்ளீர்கள்.
கொக்கைன், கஞ்சா அல்லது டாஸ்மாக்கில் மது வாங்கி குடித்துவிட்டு படுத்துவிட்டீர்களா? தேவை என்றால் வாய் திறப்பீர்கள், தேவை இல்லை என்றால் வாய் திறக்க மாட்டீர்கள்” என பேசினார். சர்ச்சைக்குரிய வகையிலும் சீமான் பேசி உள்ளது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
Read more: தவெக 2-வது மாநாடு பூமி பூஜை: ஒரே மேடையில் விநாயகர், மாதா, மெக்கா படங்கள்..!!