மீண்டும் கை கோர்த்த சீமான் – வைகோ! மறுபுறம் ஓபிஎஸ் – செங்கோட்டையன் – டிடிவி சந்திப்பு.. அரசியல் களமாக மாறிய பசும்பொன்!

hq720 1

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் 11-வது ஜெயந்தி மற்றும் குரு பூஜை பசும்பொன்னில் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.. இதையொட்டி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் முத்துராமலிங்க தேவர் சிலை மரியாதை செலுத்தி வருகின்றனர்.. அதன்படி முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, டிடிவி தினகரன், ஜி.கே, மணி, சசிகலா உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்..


பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வந்த போது வைகோ – சீமான் சந்தித்து பேசினர்.. செய்தியாளர்கள் சந்திப்பின் போது வைகோ வருவதை அறிந்து பேட்டியை நிறுத்திவிட்டு பின்னால் சென்று அவரை அழைத்து வந்து பேசினார்.. சீமானின் தோளில் கைப் போட்டுக்கொண்டு வைகோ அழைத்து வந்தார். லட்சக்கணக்கான தமிழர்கள் மனதில் மான உணர்ச்சிகளை ஊட்டியவர் சீமான் வைகோ தெரிவித்தார்.. தானும் செந்தமிழர் சீமான் அவர்களும் நானும் ஒரே நேரத்தில் வந்தது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்தார்..

தொடர்ந்து மோதல் போக்கை கடைபிடித்து வந்த நாம் தமிழர் – மதிமுகவும் இணக்கம் காட்டியது தமிழக அரசியலில் முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.

இதனிடையே தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜையை முன்னிட்டு பசும்பொன் தேவருக்கு மரியாதை செய்ய ஓபிஎஸ் மற்றும் செங்கோட்டையன் இருவரும் ஒரே காரில் பயணம் செய்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் இருந்து பசும்பொன்னிற்கு 2 பேரும் ஒரே காரில் பயணித்தனர்.. பின்னர் இருவரும் திறந்த வேனில் இருவரும் பயணம் செய்தனர்.. தேவர் சிலைக்கு மரியாதை செலுத்திய பின் இருவரும் ஒன்றாக செய்தியாளர்களை சந்திக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பசும்பொன் அருகே டிடிவி தினகரன், ஓபிஎஸ், செங்கோட்டையனை சந்தித்து பேசினர்..

இதனால் பசும்பொன் அரசியல் களமாக மாறி உள்ளது.. அதிமுக தலைமைக்கு கெடு விதித்த நிலையில் கட்சிக்கு எதிராக தனது நடவடிக்கைகளை கே .ஏ .செங்கோட்டையன் தொடங்கி விட்டாரா? செங்கோட்டையன் முன்னெடுப்பிற்கு ஓ. பன்னீர்செல்வம் இசைவு தெரிவிக்க வாய்ப்புள்ளதா? தலைமைக்கு எதிராக செயல்படும் செங்கோட்டையன் அதிமுகவிலிருந்து நீக்கப்படுவாரா? என பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. இந்த கேள்விக்கெல்லாம் விரைவில் பதில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..

RUPA

Next Post

Breaking : தேவர் சிலைக்கு ஓபிஎஸ், செங்கோட்டையன், டிடிவி கூட்டாக மரியாதை.. உச்சக்கட்ட அதிர்ச்சியில் இபிஎஸ்.. அடுத்தது என்ன?

Thu Oct 30 , 2025
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் 11-வது ஜெயந்தி மற்றும் குரு பூஜை பசும்பொன்னில் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.. இதையொட்டி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் முத்துராமலிங்க தேவர் சிலை மரியாதை செலுத்தி வருகின்றனர்.. அதன்படி முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, சீமான், ஜி.கே, மணி, சசிகலா உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.. இதனிடையே தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜையை முன்னிட்டு பசும்பொன் […]
ops sengottaiyan ttv

You May Like