செல்வ மகள் சேமிப்புத் திட்டம்..!! வந்தாச்சு லேட்டஸ்ட் அப்டேட்..!! லட்சங்களில் வருமானம் கொட்டும்..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

Selva Magal 2025

நமது நாட்டின் எதிர்காலத் தூண்களான பெண் குழந்தைகளின் வாழ்வுக்கு நிதிப் பாதுகாப்பு அளிப்பது ஒவ்வொரு பெற்றோரின் கனவு. அந்தக் கனவை நனவாக்க உதவும் திட்டங்களில் ஒன்றுதான் செல்வ மகள் சேமிப்புத் திட்டம் (சுகன்யா சம்ரித்தி யோஜனா). இந்த திட்டம் ஒரு சாதாரண சேமிப்புத் திட்டமாக மட்டுமின்றி, ஒரு பெண் குழந்தையின் கல்வி, திருமணம், மருத்துவ தேவைகளுக்கு பெரும் உதவியாக இருக்கிறது. இத்திட்டத்தை தபால் நிலையங்களில் தொடங்கலாம்.


பிரதமர் மோடியால் கடந்த 2015ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இத்திட்டம், குறைந்த முதலீட்டில் மிகப்பெரிய வருமானத்தை தருவதாகும். இத்திட்டத்தின் ஒரு பெரிய சிறப்பு என்னவென்றால், கணக்கை தொடங்க பெரிய தொகை தேவையில்லை. வெறும் ரூ.250 இருந்தால் போதும்.

ஒரு நிதியாண்டில் அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம். ஒருவேளை சில வருடங்கள் முதலீடு செய்ய முடியாமல் போனால், வெறும் ரூ.50 அபராதம் செலுத்தி கணக்கை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வரலாம். இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யும் தொகைக்கு அதிக வட்டி விகிதம் கிடைப்பதால், பல பெற்றோர்கள் இதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

உதாரணத்திற்கு, நீங்கள் மாதத்திற்கு ரூ.2,000 வீதம் 15 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால், 21 ஆண்டுகளுக்குப் பிறகு வட்டியுடன் சேர்த்து ரூ.11.16 லட்சம் வரை பெற முடியும். இது, நமது சிறு சேமிப்புகளுக்குக் கிடைக்கும் பெரிய லாபத்தை காட்டுகிறது. இதேபோல், இந்த திட்டத்தின் மூலம் ரூ.64 லட்சம் நிதியை கூட பெற முடியும்.

அதாவது, மாதந்தோறும் ரூ.11,550 முதலீடு செய்தால், ஆண்டுக்கு ரூ.1,38,600 டெபாசிட் செய்யப்படும். 15 ஆண்டுகள் தொடர்ந்து முதலீடு செய்தால், மொத்த வைப்புத் தொகை ரூ.20,79,000ஆக இருக்கும். இந்த தொகைக்கு 8.2% வட்டி விகிதத்தில், முதிர்ச்சியின்போது ரூ.64,01,082 கிடைக்கும். இதில், வட்டியே ரூ.43,22,082 கிடைக்கும்.

முதலீட்டுக்கான விதிகள் :

10 வயதுக்கு குறைவான பெண் குழந்தைகளுக்கு, பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் பெயரில் இத்திட்டத்தில் முதலீடு செய்யலாம். குழந்தை 10 வயதை அடைந்ததும், கணக்கை அவர்களது பெயருக்கு மாற்றிக் கொள்ளலாம். இத்திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் 15 ஆண்டுகளுக்கு முதலீடு செய்ய வேண்டும். 21 ஆண்டுகள் நிறைவடைந்ததும், கணக்கு முதிர்ச்சியடைந்து முழுத் தொகையையும் பெற்றுக் கொள்ளலாம். தற்போது இந்தத் திட்டம் ஆண்டுக்கு 7.7% வட்டி விகிதத்தில் கிடைக்கிறது. இதன் மூலம் ரூ.2 லட்சம் வரை வருவாய் ஈட்ட முடியும். உங்கள் குழந்தையின் எதிர்காலத்தை பாதுகாக்க, நீங்களும் இந்தத் திட்டங்களைப் பற்றி அறிந்து, முதலீடு செய்ய தயாராகுங்கள்.

Read More : IPBS..! 13,217 வங்கி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி…! மிஸ் பண்ணிடாதீங்க…!

CHELLA

Next Post

GST குறைப்பு தொடர்பாக 1915 என்ற கட்டணமில்லா எண் மூலமாக புகார் தெரிவிக்கலாம்...!

Sun Sep 21 , 2025
மத்திய நிதியமைச்சர் தலைமையில் நடைபெற்ற 56-வது சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சில் கூட்டத்தின் போது அங்கீகரிக்கப்பட்ட அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்களுடன் தேசிய நுகர்வோர் உதவி தளமான என்சிஹெச்- ஐ (NCH) இணைக்க நுகர்வோர் விவகாரத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. 22.09.2025 முதல் அமலுக்கு வரும் திருத்தப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விகிதங்கள் குறித்து நுகர்வோரின் சந்தேகங்கள், கேள்விகளுக்கு பதில் அளிக்கவும் புகார்களைத் தீர்க்கவும், […]
GST state benefits

You May Like