“செங்கோட்டையன் ஒரு கிழவர்.. அவர் எந்த நாட்டிற்கு விஜய்யை முதல்வராக்கப் போகிறார்..” அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சனம்..!

sellur raju sengottaiyan

அதிமுகவை ஊழல் சக்தி என்று தவெக தலைவர் விஜய் விமர்சித்த நிலையில், விஜய்யையும் தவெகவும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.. அந்த வகையில் தற்போது அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு இன்று விஜய் மற்றும் செங்கோட்டையனை காட்டாமாக விமர்சித்தார்.


மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் “ செங்கோட்டையன் ஒரு செல்லாக்காசு என்றே ஏற்கனவே நான் சொல்லிவிட்டேன்.. செல்லாக்காசு 1000 பேசினாலும் ஒன்றும் ஆகப் போவதில்லை.. அதை பற்றி எல்லாம் பேசவேண்டாம்.

செங்கோட்டையன் அதிமுகவில் இருந்தவர்.. அவருக்கு எதுவும் தெரியவில்லை.. தவெகவிலேயே செங்கோட்டையனை ஏற்றுக் கொள்ளவில்லை. அவருக்கு வயதாகிவிட்டது என்பதால் அவரை கிழவர் என்று பேசாமல் இரு, என்று தள்ளிவிட்டு போய்விடுகின்றனர்.. இதுமாதிரி பேசுவதனால் செங்கோட்டையனை ஏற்றுக்கொள்ளப் போகிறார்களா? அதிமுகவில் இருந்து சென்ற செங்கோட்டையனை தவெக நிர்வாகிகள் மதிப்பதே இல்லை..

விஜய்யை எந்த நாட்டிற்கு முதலமைச்சர் ஆக்கப் போகிறார் செங்கோட்டையன்.. ஏதாவது ஒரு கல்லூரிக்கு வேண்டுமானால் விஜய்யால் முதல்வர் ஆக முடியும்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு என்ன தெரியும்? அவருக்கு அதிமுகவை பற்றி என்ன அருகதை உள்ளது? லாட்டரி சீட்டு மூலம் ஏழைகளின் ரத்தத்தை உறிஞ்சிய ஆதவ் அர்ஜுனா எங்களை பற்றி பேசக்கூடாது..

உதயநிதி எங்களை திட்டிக் கொண்டே இருக்கட்டும்.. திட்ட திட்ட தான் எங்களுக்கு வளர்ச்சி. கருணாநிதி – ஜெயலலிதா போல் ஸ்டாலின் – எடப்பாடி பழனிசாமி இடையே தான் போட்டி.. சட்டமன்ற தேர்தலில் எங்களுக்கும் திமுகவுக்கு இடையே தான் நேரடி போட்டியே..” என்று தெரிவித்தார்..

Read More : தவெக நிர்வாகிகள் அதிரடி கைது..!! முக்கியப் புள்ளியை வலைவீசி தேடும் தனிப்படை..!! அதிர்ச்சியில் விஜய்..!!

RUPA

Next Post

தினமும் வெந்நீர் அருந்தினால், 30 நாட்களில் உங்கள் உடலில் என்ன மாற்றங்கள் நிகழும்..?

Mon Feb 9 , 2026
காலையில் எழுந்தவுடன் தண்ணீர் குடிக்க பலருக்குப் பிடிக்காது. யாராவது அவர்களைக் குடிக்கச் சொன்னால், அவர்கள் வாந்தி எடுத்துவிடுவார்கள். இந்தத் தண்ணீரால் பலரும் இப்படி ஆகிவிடுகிறார்கள். வெதுவெதுப்பான தண்ணீரைக் குடிக்கச் சொன்னால், அதை அவர்கள் தொடவே மாட்டார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு, காலையில் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான தண்ணீரைக் குடித்தால் உடலில் என்ன நடக்கும்? இதை 30 நாட்கள் குடித்தால் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்று பார்க்கலாம். காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான […]
Copy of hot water b8 102023

You May Like