2026 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனைப் போட்டி நிலவுகிறது.. பாமக, தேமுதிக போன்ற கட்சிகளும் ஏதேனும் ஒரு கட்சியுடன் கூட்டணி வைக்கும் என்று கூறப்படுகிறது..
அதிமுக பல பிரிவுகளாக பிரிந்து கிடப்பதால் கூட்டணி வாக்குகள் சிதற வாய்ப்புள்ளது.. எனவே ஓபிஎஸ், டிடிவி தினரன், சசிகலா ஆகியோரை அதிமுகவில் இணைக்கக் கோரி எவ்வளவோ வலியுறுத்தியும் இபிஎஸ் பிடிவாதம் காட்டி வருகிறார்.. எனவே இந்த தேர்தலில் திமுகவை தோற்கடிக்க இடையூறாக இருக்கும் எந்த ஒரு சக்தியையும் தூக்கி எறியவும், வெற்றி பெறும் வாய்ப்பை பயன்படுத்தவும் பாஜக டெல்லி தலைமை உறுதியோடு இருக்கிறதாம்..
அதன்படி, என்.டி.ஏ கூட்டணியில் இருந்து விலகி சென்ற ஓபிஎஸ்-ஐ மீண்டும் கூட்டணியில் சேர்க்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.. ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா இணைந்து ஓரணியாக செயல்பட உள்ளதாக கூறப்படுகிறது.. அதிமுக ஒன்றிணையாவிட்டால் அதிமுக உரிமை மீட்புக் குழு கழகமாக மாறும் என்று சமீபத்தில் ஓபிஎஸ் கூறியிருந்தார்.. ஆனால் இபிஎஸ் ஒரு நம்பிக்கை துரோகி என்று மோடியும், அமித்ஷாவும் நம்புகிறார்களாம்..
எனவே எடப்பாடி பழனிசாமியை தனிமைப்படுத்தி அரசியல் வாய்ப்புகளே இல்லாத படி கொண்டு செல்வதே பாஜகவின் திட்டமாம்.. அதிமுக ஒன்றிணைந்தால் இபிஎஸ் தனியாகிவிடுவார் என்ற பிளானை செயல்படுத்த தொடங்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது..
இந்த திட்டத்தின் படியே செங்கோட்டையனும் தவெகவில் இணைந்துள்ளாராம்.. அதாவது செங்கோட்டையன் மூலம் தவெகவை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, எடப்பாடி பழனிசாமியை கூட்டணியில் இருந்து கழட்டி விட்டு, அவரை தனிமைப்படுத்த பாஜக ஸ்கெட்ச் போடுகிறதாம்..
அதுமட்டுமின்றி 2026 தேர்தலில் நிர்மலா சீதாராமனை முதல்வரா வேட்பாளராகவும், தவெக தலைவர் விஜய்யை துணை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க பாஜக திட்டமிட்டுள்ளதாம்.. மேலும் இதற்கான பேச்சுவார்த்தையும் மறைமுகமாக நடந்துவருகிறது.. பாஜகவை கொள்கை எதிரி என்று சொல்லி வரும் விஜய், அரசியல் எதிரியான திமுகவை எதிர்க்கும் நோக்கத்திற்காக கொள்கை எதிரியுடன் சமரசமாக செல்வதாக கூறிக் கொள்வார் என்றும் கூறப்படுகிறது.. ஆனால் 2026-ல் தான் முதல்வர் என்று கூறிக்கொள்ளும் விஜய் பாஜகவின் இந்த திட்டத்திற்கு எப்படி ஒப்புக்கொள்வார் என்றால், அதற்கு கரூர் விவகாரம் சிபிஐ வசம் உள்ளதே.. அதை வைத்து விஜய்யை பாஜக மிரட்டலாம் என்றும் கூறப்படுகிறது.. எது எப்படியோ பாஜகவின் இந்த ஆட்டத்தில் விஜய் சிக்கிக் கொண்டதாகவே தெரிகிறது..
Read More : பாமக தலைவர் யார்? அன்புமணிக்கு எதிராக ராமதாஸ் வழக்கு.. எப்போது விசாரணைக்கு வருகிறது?



