நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய், மதுரையில் 2-வது மாநில மாநாடு நடத்தி முடித்தப் பின் கொண்டாட்டத்தில் உள்ளார். இந்த மாநாட்டில் சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. மேலும், இந்த மாநாட்டில் விஜய் பேசியது பல அரசியல் கட்சியினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. முதலமைச்சர் முக.ஸ்டாலின் பிரதமர் மோடி குறித்து இந்த மாநாட்டில் நேரடியாகவும், கடுமையாகவும் விமர்சனம் செய்தார்.
அதேபோல், திமுக – பாஜகவை தொடர்ந்து தற்போது அதிமுகவையும் விமர்சிக்க தொடங்கியிருக்கிறார் விஜய். எம்ஜிஆர் உருவாக்கிய கட்சி தற்போது யார் கையில் உள்ளது என்று விஜய் பேசியிருக்கிறார். விஜய்யின் இந்த மாநாட்டு பேச்சுக்கு திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்தும், விமர்சித்தும் வருகின்றனர்.
இந்த சூழலில் தான், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பெங்களூரு புகழேந்தி, மருது அழகுராஜா உள்ளிட்டோர் விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். வரும் சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கும் – தவெகவுக்கும் தான் போட்டி இருக்கும் இருந்து பெங்களூரு புகழேந்தி கூறியிருக்கிறார். கட்சி தொடங்கிய 7 மாதங்களில் என்.டி.ஆர். ஆட்சி அமைத்தார். அரசியலில் எதுவும் நடக்கும். எடப்பாடியை பழனிசாமியை முதல்வராக்க வேண்டும் என்று அண்ணாமலை பேசுகிறார். அவர் ஏன் திடீரென இப்படி தடுமாறிவிட்டார் என்று தெரியவில்லை என்று புகழேந்தி விமர்சித்துள்ளார்.
பெங்களூரு புகழேந்தியும், மருது அழகுராஜா உள்ளிட்டோ எம்ஜிஆருக்கு அடுத்தபடியாக விஜய் தான் என்று கூறி வருகின்றனர். இதற்கிடையே, அதிமுகவில் இருந்து வெளியேறியவர்கள், நீக்கப்பட்டவர்கள் மீண்டும் அதிமுகவில் இணைய முடியாது என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ள நிலையில், இவர்களின் குரல் விஜய்-க்கு ஆதரவாக திரும்பியிருக்கிறது. இதனால், வரும் சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகவும், விஜய்க்கு ஆதரவாகவும் இருவரும் பிரச்சாரம் செய்வார்கள் என்று கூறப்படுகிறது.
Read More : உடற்பயிற்சிக்கு பின் இந்த உணவுகளை மட்டும் தொடவே தொடாதீங்க..!! மொத்தமும் வேஸ்ட்..!!