மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் கேரள முதலமைச்சருமான வி.எஸ் அச்சுதானந்தன் 101 வயதில் காலமானார்.
ஏற்கனவே பக்கவாதம் காரணமாக சிகிச்சை பெற்று வந்த கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவினால் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மருத்துவமனையில் இதய நோய் நிபுணர்கள் தலைமையிலான குழு, அவரது உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் வயது மூப்பு காரணமாக வி.எஸ் அச்சுதானந்தன் காலமானார். அவருக்கு வயது 101.
யார் இந்த வி.எஸ். அச்சுதானந்தன்? இவர் மூத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் மற்றும் கேரளாவின் முன்னாள் முதல்வர். 1923-ல் ஆலப்புழா மாவட்டத்தில் பிறந்த இவர், வறுமையில் இருந்து எழுந்து, தொழிலாளர் மற்றும் விவசாய தொழிலாளர்களுக்காக போராடியவர். புன்னப்புரா-வயலார் போர் உள்ளிட்ட பல எதிர்ப்புப்போராட்டங்களில் பங்கேற்று, பலமுறை சிறைவாசம் அனுபவித்துள்ளார்.
2006-ல் முதல்வராக பதவியேற்றார். 80 ஆண்டுகளுக்கும் மேலான தனது அரசியல் வாழ்நாளில் ஊழல் எதிர்ப்பு, சமூகநீதி என பன்முக சேவைகளை ஆற்றியவர். வயது மூப்பு காரணமாக, வி.எஸ்.அச்சுதானந்தன் கடந்த சில ஆண்டுகளாக பொது வாழ்க்கையில் இருந்து விலகி ஓய்வில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
Read more: பொதுத்துறை வங்கிகளில் 1,007 காலியிடங்கள்.. மாதம் ரூ.85,920 சம்பளம்..!! உடனே அப்ளை பண்ணுங்க..