திமுக மூத்த தலைவர்.. முன்னாள் MLA காலமானார்.. முதல்வர் ஸ்டாலின் இரங்கல்..!

newproject 2025 08 28t143719 105 1756372277

திமுக மூத்த தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான சின்னசாமி மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்..

தருமபுரி மாவட்ட திமுகவின் மூத்த தலைவர் ஆர். சின்னசாமி. இவர் 1971, 1984, 1989 ஆண்டு தேர்தல்களில் திமுக சார்பில் தருமபுரி சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.. இந்த நிலையில் வயது மூப்பு காரணமாக ஆர். சின்னசாமி இன்று காலமானார்.. அவரின் மறைவு தருமபுரி மாவட்ட திமுகவினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.. அவரின் மறைவுக்கு திமுகவினர் மட்டுமின்றி பல்வேறு கட்சி ட் தலைவர்களுக்கும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்..


ஆர். சின்னசாமி மறைவை ஒட்டி தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் “ 1971, 1984 மற்றும் 1989-ஆம் ஆண்டு தேர்தல்களில், தி.மு.கழக உறுப்பினராகத் தருமபுரி சட்டமன்றத் தொகுதியில் வென்றவரும், ஒருங்கிணைந்த தருமபுரி மாவட்டக் கழகத்தின் முன்னாள் செயலாளருமான திரு. ஆர். சின்னசாமி அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகவும் வருத்தமடைந்தேன்.

திரு. சின்னசாமி அவர்கள் மூன்று முறை தருமபுரி சட்டமன்ற உறுப்பினராக இருந்து அம்மாவட்டத்தின் வளர்ச்சிக்காக பெரும் பணிகளை ஆற்றியவர். மூத்த முன்னோடியாக, திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதுபெரும் உறுப்பினராக இருந்து, திரு. ஆர். சின்னசாமி அவர்களின் மறைவு கழகத்துக்கும் பேரிழப்பாகும். நமக்கு தருமபுரி மக்களுக்கும்வழிகாட்டிய அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், கழகத்தினருக்கும். பொதுமக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்..” என்று குறிப்பிட்டுள்ளார்..

Read More : Flash: தமிழகத்தை உலுக்கிய ஆம்பூர் கலவர வழக்கு.. 161 பேர் விடுதலை..! – நீதிமன்றம் அதிரடி

RUPA

Next Post

பெண்களே.. அடிக்கடி த்ரெட்டிங் செய்றீங்களா..? உடலில் இந்த பாதிப்பை ஏற்படுத்தும்..!! - எச்சரிக்கும் நிபுணர்கள்..

Thu Aug 28 , 2025
Do you often thread..? It can cause this damage to the body..!! - Experts warn..
threading

You May Like