இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு உடல்நிலையில் பின்னடைவு..!! ICU-வில் தொடர் சிகிச்சை..!!

Nallakannu 2026

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் உடல்நிலை தற்போது கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 100 வயதை கடந்த நிலையில், வயது முதிர்வு காரணமாக அவருக்கு அவ்வப்போது உடல்நலப் பாதிப்புகள் ஏற்பட்டு வந்தன. இந்தச் சூழலில், கடந்த சில வாரங்களாக நிலவி வந்த மூச்சுத்திணறல் மற்றும் இதயம் தொடர்பான பாதிப்புகள் காரணமாக, இம்மாத தொடக்கத்தில் அவர் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாளிலிருந்து அவருக்குச் சிறப்பு மருத்துவக் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். சுமார் 20 நாட்களுக்கும் மேலாக அவர் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவிலேயே (ICU) தங்கி சிகிச்சை பெற்று வருகிறார். இடையில் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதாக கருதப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முதுமை காரணமாக உறுப்புகளின் செயல்பாடு மந்தமாக இருப்பதாலும், மூச்சு விடுவதில் சிரமம் தொடருவதாலும் அவரது உடல்நிலை தற்போது மோசமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. மருத்துவர்கள் அவரது உடல்நிலை மாற்றங்களை 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர். எளிமைக்கும் நேர்மைக்கும் இலக்கணமாகத் திகழும் நல்லகண்ணு ஐயாவின் உடல்நிலை குறித்துத் தகவலறிந்த அவரது கட்சித் தொண்டர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மிகுந்த கவலையுடன் மருத்துவமனைக்கு விரைந்து வருகின்றனர். மருத்துவமனை நிர்வாகம் இது குறித்து விரிவான மருத்துவ அறிக்கையை விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read More : வசமாக சிக்கிக் கொண்ட விஜய்..!! வெச்சு செய்யும் எதிர்க்கட்சிகள்..!! அப்செட்டில் தொண்டர்கள்..!! என்ன நடந்தது..?

CHELLA

You May Like