கரூர் மாவட்ட அரசியல் களம் எப்போதும் அனல் பறக்கும் ஒரு போர்க்களமாகவே இருந்து வருகிறது. குறிப்பாக, அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகிய இரு துருவங்களுக்கு இடையே நிலவும் அரசியல் யுத்தம், 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு இப்போதே உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. தனது கோட்டையை தக்கவைக்க செந்தில் பாலாஜியும், இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க விஜயபாஸ்கரும் வகுக்கும் வியூகங்களால் கரூரில் அரசியல் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.
இந்த அரசியல் மோதலின் ஒரு பகுதியாக, அதிமுகவின் கரூர் மாவட்ட மருத்துவ அணி செயலாளரான டாக்டர் தர்மேந்திரன் திடீரென செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைந்தது, அதிமுக முகாமை நிலைகுலைய செய்துள்ளது. கட்சி தாவல்கள் அரசியலில் சகஜம் என்றாலும், விஜயபாஸ்கருக்கு மிகவும் நெருக்கமானவர்கள் மற்றும் நம்பிக்கைக்குரிய நிர்வாகிகள் அடுத்தடுத்து திமுக பக்கம் சாய்வது, அவருக்குப் பெரும் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.
செந்தில் பாலாஜியின் இந்த நிர்வாகிகள் வேட்டைக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், அதற்கு ஈடுகட்டவும் விஜயபாஸ்கர் தரப்பு தீவிரமாக ஆலோசித்து வருகிறது. திமுகவில் உள்ள அதிருப்தி நிர்வாகிகளை தங்கள் பக்கம் இழுப்பதன் மூலம் செந்தில் பாலாஜிக்குச் சரியான பதிலடி கொடுக்க அதிமுக திட்டமிட்டுள்ளது. இதனால் கரூரில் இரு தரப்பினருக்கும் இடையே ஒரு மறைமுகமான நிர்வாகிகள் கடத்தல் யுத்தமே நடந்து வருகிறது.
Read More : ரேஷன் கடைகளில் அதிரடி மாற்றம்..!! இனி பொருட்களுக்கு பதில் பணம்..!! யார் யாருக்கு கிடைக்கும் தெரியுமா..?



