செந்தில் பாலாஜி போட்ட பிளான்..!! கும்பல் கும்பலாக திமுகவில் இணையும் அதிமுக நிர்வாகிகள்..!! அதிர்ச்சியில் எடப்பாடி பழனிசாமி..!!

eps senthil balaji

தமிழ்நாட்டில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான அரசியல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. கூட்டணியின் பலத்தை மட்டுமே நம்பி இல்லாமல், மாற்றுக் கட்சியினரை தங்கள் பக்கம் இழுக்கும் பணியில் அனைத்துப் பிரதான கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. குறிப்பாக, ஆளும் கட்சியான திமுக ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற உறுப்பினர் சேர்க்கைத் திட்டத்தின் கீழ், மற்ற கட்சிகளில் உள்ள முக்கிய நிர்வாகிகளை இணைக்கும் பணியை முடுக்கி விட்டுள்ளது. இதன் காரணமாக, கடந்த சில நாட்களாகவே பிற கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் பலர் தொடர்ந்து திமுகவில் இணைந்து வருகின்றனர்.


இந்தச் சூழலில், எதிர்வரும் 2026 தேர்தலை கருத்தில் கொண்டு, கரூர் மாவட்டத்தில் மாற்றுக் கட்சிகளை இணைக்கும் பணியில் திமுக மேலும் வேகம் காட்டி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கரூர் தொகுதியின் தேமுதிக நகர துணைச் செயலாளர் ஈஸ்வரன் மற்றும் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளான யுவராஜ், குபேரன், சந்திரசேகரன், தினேஷ், சசிகுமார், தமிழ்செல்வன் உள்ளிட்டோர் திமுகவில் இணைந்தனர்.

திமுகவின் முக்கிய நிர்வாகி செந்தில் பாலாஜி முன்னிலையில் இந்த நிர்வாகிகள் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர். இந்த முக்கிய நிர்வாகிகள் இணைப்பானது, கரூர் தொகுதியில் திமுகவின் கட்டமைப்பை மேலும் பலப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சம்பவம், தேர்தல் நெருங்கும் வேளையில், மாவட்டத்தில் அரசியல் நகர்வுகளை மேலும் சூடுபிடிக்க வைத்துள்ளது.

Read More : SIP-இல் மாதம் ரூ.5,000 முதலீடு..!! ரூ.1 கோடி இலக்கை எளிதாக அடைவது எப்படி..? புதிய முதலீட்டாளர்களுக்கு எந்த ஃபண்ட் சிறந்தது..?

CHELLA

Next Post

ரவுடியுடன் மலர்ந்த காதல்..!! அடிக்கடி வீட்டிற்கு சென்று உல்லாசமாக இருந்த 10ஆம் வகுப்பு மாணவி..!! கடைசியில் நடந்த துயரம்..!!

Sun Nov 23 , 2025
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்துள்ள சோமங்கலம் பகுதியில், 10ஆம் வகுப்பு படித்து வந்த 15 வயது சிறுமி, தனது காதலன் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சோமங்கலம் பகுதியைச் சேர்ந்த சாருமி (15) என்ற அந்த சிறுமி, அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் படித்து வந்த நிலையில், படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு வீட்டிலிருந்தார். இதற்கிடையே, கடந்த 5 மாதங்களுக்கு முன் சிறுமியை […]
Kanjipuram 2025

You May Like