Flash : செப்.19 : மீண்டும் நகைப்பிரியர்களின் தலையில் இடியை இறக்கிய தங்கம் விலை.. எவ்வளவு உயர்வு?

DALL E 2023 11 06 17 35 28 Create a luxurious and captivating banner for an article that celebrates the marriage of traditional Indian gold jewelry with contemporary design aest e6f89ab642 1 1

உலக பொருளாதாரத்தில் நிலவும் ஏற்ற இறக்கங்களை பொறுத்து தங்கம் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகள் தங்கம் விலை உயர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன.


ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது.

கிட்டத்தட்ட 15 நாட்களாகவே தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது.. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. அந்த வகையில், கடந்த வாரம் ஒரு சவரன் தங்கம் விலை ரூ. 81,000ஐ கடந்ததால் நகைப்பிரியர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.. இடை இடையே சிறிதளவு தங்கம் விலை குறைந்தாலும், பெரியளவில் விலை குறையவில்லை..

அந்த வகையில், சென்னையில் 2 நாட்களுக்கு முன்பு தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டு, சவரன் ரூ.82,000ஐ கடந்து விற்பனையானது. ஆனால் பின்னர் தங்கம் விலை சற்று குறைந்தது..

இந்த நிலையில் இன்று மீண்டும் தங்கம் விலை உயர்ந்துள்ளது… அதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.10,230க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு சவரனுக்கு ரூ. 80 உயர்ந்து ரூ. 81,840க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதே போல் இன்று வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது.. ஒரு கிராம் வெள்ளி ரூ. 2 உயர்ந்து ரூ.143க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோ ரூ.1,43,000க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்..

Read More : இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரர்கள் தங்கள் பணத்தை எதற்காக அதிகம் செலவிடுகிறார்கள் தெரியுமா?. ஆச்சரிய தகவல்!

RUPA

Next Post

இந்த 4 பொருட்களையும் உங்கள் சமையலறையில் இருந்து உடனே தூக்கிப் போடுங்க.. இல்லன்னா இந்த கடுமையான நோய் வரலாம்..!

Fri Sep 19 , 2025
நவீன யுகத்தில், மனிதனின் வாழ்க்கை முறை முற்றிலும் மாறிவிட்டது. நகர்ப்புற வாழ்க்கை, அழுத்தம் மற்றும் வசதியின் அவசரத்தில், பலர் தங்கள் ஆரோக்கியத்தை புறக்கணிக்கின்றனர். இதன் விளைவாக, சிறிய பழக்கவழக்கங்கள் நாள்பட்ட நோய்களுக்கு வழிவகுக்கின்றன. இருப்பினும், சில பொதுவான தவறுகளை சரிசெய்து, சமையலறையில் உள்ள சில பொருட்களை மாற்றுவதன் மூலம், ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும் என்று ஆயுர்வேத நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். பிரபல ஆயுர்வேத மருத்துவர் தீபக் குமார் இதுகுறித்து பேசிய போது […]
kitchen cooking

You May Like