தாய்லாந்தின் புகெட் மாகாணத்தில், ஓடும் பிக்கப் வாகனத்தின் பின்னால் ஒரு ரஷ்ய இளைஞரும் தாய்லாந்துப் பெண்ணும் பொது இடத்தில் ஆபாசமான செயலில் ஈடுபட்ட வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த 15 விநாடி வீடியோ செப்.24 அன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி, பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதுடன், அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை வலுத்தது.
அந்த வைரலான வீடியோவில், அதிவேகமாக செல்லும் கருப்பு டிரக்கின் பின் இருக்கையில், அந்தப் பெண் அங்கு கட்டப்பட்ட கயிற்றைப் பிடித்திருக்க, ஆண் அவரைப் பின்னால் இருந்து இடுப்பைப் பிடித்துக்கொண்டு ஆபாச செயலில் ஈடுபடுவது பதிவாகியுள்ளது.
இந்த வீடியோ வைரலான நிலையில், அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கையில் இறங்கினர். சம்பவத்தில் ஈடுபட்ட முக்கிய சந்தேகநபரான ஜார்ஜி (Georgii) என்ற 23 வயது ரஷ்ய நாட்டவர், செப்.25ஆம் தேதி அன்று சுவர்ணபூமி விமான நிலையத்தில் வைத்து குடியேற்ற காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். அவர் வியட்நாமுக்குச் செல்லும் விமானத்தில் ஏற முயன்றபோது பிடிபட்டார். பின்னர், அவர் சட்ட நடவடிக்கைகளுக்காக புகெட் காவல்துறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
புகெட் அதிகாரிகள் ஜார்ஜி மீது பொது இடத்தில் ஆபாச செயலில் ஈடுபட்டது மற்றும் ஆபாச உள்ளடக்கத்தை இணையத்தில் பதிவேற்றியதற்காக வழக்குப் பதிவு செய்துள்ளனர். நீதிமன்ற நடவடிக்கைகள் முடிந்தவுடன், அவரது விசா ரத்து செய்யப்பட்டு, தாய்லாந்திற்குள் மீண்டும் நுழைய முடியாதவாறு கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டு, அவர் நாடுகடத்தப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணையின்போது, ஜார்ஜி தாங்கள் பாலியல் உறவில் ஈடுபடவில்லை என்றும், இருவரும் உள்ளாடைகளை அணிந்திருந்ததாகவும், இந்தச் செயல் ஆன்லைன் உள்ளடக்கத்திற்காக மட்டுமே அரங்கேற்றப்பட்டது என்றும் மறுத்துள்ளார். புகெட் அதிகாரிகள் அளித்த தகவலின்படி, ஜார்ஜி சமூக ஊடகங்களில் லட்சக்கணக்கான பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ளார் மற்றும் இதுபோன்ற வீடியோக்களை உலகம் முழுவதும் தொடர்ந்து தயாரிப்பவர் என்பது தெரியவந்துள்ளது.
இந்தச் செயலில் ஈடுபட்ட 42 வயது தாய்லாந்துப் பெண், தான் பணிபுரியும் உள்ளூர் பாரில் ஜார்ஜியை சந்தித்ததாகவும், இரண்டு வீடியோக்களில் தோன்றுவதற்காக 1,000 தாய் பாத் (சுமார் $31 அமெரிக்க டாலர்) பெற்றதாகவும் ஒப்புக்கொண்டார். அவர் மீது பொது ஒழுக்கக்கேடு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், இந்த வழக்கு கிரிமினல் வழக்காக புகெட் மாகாண நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.
வீடியோவை பார்க்க : https://twitter.com/pisklauren/status/1971218463415844920/video/3
அதேபோல், பிக்கப் டிரக்கை ஓட்டிச் சென்ற 59 வயதான ரஷ்யப் பெண் டீனா (Dina) என்பவருக்கும் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அவரது விசாவும் ரத்து செய்யப்பட்டு, கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதுடன், நீதிமன்ற நடவடிக்கைகள் முடிந்ததும் அவரும் நாடுகடத்தப்படுவார். தற்போது சம்பந்தப்பட்ட அனைவரும் புகெட் காவல் நிலையத்தில் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
Read More : விவசாயிகளுக்கு மகிழ்ச்சி செய்தி..! குறைந்தபட்ச ஆதரவு விலையை குவிண்டாலுக்கு ரூ.600 ஆக உயர்வு..! முழு விவரம்