ஹைதராபாத்தில் உள்ள சப்தகிரி காலனி பகுதியில், மதுபோதைக்கு அடிமையான தனது கணவர் சுரேஷை, அவருடைய மனைவி மௌனிகா, கள்ளக்காதலன் மற்றும் ஒரு நண்பருடன் இணைந்து திட்டமிட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுரேஷ் (ஓட்டுநர்) – மௌனிகா தம்பதிக்குத் திருமணமாகி 10 ஆண்டுகள் ஆன நிலையில், சுரேஷ் மதுப்பழக்கத்துக்கு அடிமையாகி, மனைவியை அடித்துத் துன்புறுத்தி வந்துள்ளார்.
வன்முறை தாங்க முடியாத மௌனிகா, இரு குழந்தைகளின் செலவுகளுக்காக பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த அஜய் என்பவருடன் அவருக்கு கள்ளக்காதல் மலர்ந்துள்ளது. கணவரின் கொடுமைகளால் வெறுப்படைந்த மௌனிகா, காதலன் அஜய் மற்றும் நண்பர் சிவகிருஷ்ணா ஆகியோருடன் சேர்ந்து சுரேஷைக் கொல்ல திட்டமிட்டார். முதல் முயற்சியாக, உணவில் அதிக அளவு வயக்ரா மற்றும் ரத்த அழுத்த மாத்திரைகளைக் கலந்து கொடுக்க முயன்றபோது, உணவு விசித்திர வாசனையுடன் இருந்ததால் சுரேஷ் அதைச் சாப்பிட மறுத்துவிட்டார்.
இந்த திட்டம் தோல்வியடைந்ததால், அடுத்த நாள் சுரேஷ் மது அருந்தியபோது, மதுவில் அதிக அளவு தூக்க மருந்தைக் கலந்து கொடுத்துள்ளார் மௌனிகா. மயக்கமடைந்த சுரேஷை, அவர் உறங்கச் சென்ற பிறகு, சேலையால் கழுத்தை நெரித்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். கொலை நடந்த அன்று இரவு, மௌனிகா கணவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக அக்கம் பக்கத்தினரிடம் நாடகமாடி, மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளார். அங்கு சுரேஷ் ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், கணவன் இறந்த மறுநாள், மௌனிகா எந்த சோகமும் இல்லாமல் ஆண் நண்பர்களுடன் மகிழ்ச்சியாக ஊர் சுற்றியது, அத்துடன் அவர் கைப் பையில் ஆணுறை பாக்கெட்டுகள் இருந்ததை கண்ட சுரேஷின் பெற்றோர், அவர் மீது சந்தேகம் கொண்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். பின்னர், அவர்கள் நடத்திய தீவிர விசாரணையில், மௌனிகா உண்மையை ஒப்புக்கொண்டார்.
இதைத் தொடர்ந்து, மௌனிகா, அஜய் மற்றும் சிவகிருஷ்ணா ஆகிய மூவரையும் காவல்துறையினர் கைது செய்து, மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப வன்முறை, போதை மற்றும் தகாத உறவுகளின் பின்னணியில் நடந்த இக்கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Read More : “திமுக கூட்டணி வேண்டாம்”..!! விசிக தலைவர் திருமாவளவன் பரபரப்பு பேச்சு..!!



