பல பெண்கள் நடிகையாக வேண்டும் என்ற ஆசையுடன் திரையுலகில் நுழைகிறார்கள். ஆனால் திரையுலகில் பாலிய துன்புறுத்தல் மற்றும் MeToo வழக்குகள் பற்றிய செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டே தான் இருக்கின்றன.. அது தமிழ் சினிமாவாக இருந்தாலும் அல்லது மற்ற மொழி சினிமாவாக இருந்தாலும் சரி.. அந்த வகையில் கன்னட டிவி நடிகை பிரபல நடிகர் மீது பாலியல் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்..
ரிச்சி என்ற படத்தில் ஹீரோயின் ரோல் தருவதாக கூறி தன்னிடம் பாலியல் ரீதியில் அத்துமீறியதாக நடிகரும் இயக்குனருமான ஹேமந்த் மீது அந்த நடிகை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.. மேலும் படம் முடிந்த பிறகு தனக்கு சம்பளம் வழங்கப்படவில்லை என்றும் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
இயக்குனர் ஹேமந்த் 2022 ஆம் ஆண்டு மத்தினி, நீவே ஹீரோயின் என்ற படத்தின் மூலம் நடிகையை அறிமுகப்படுத்தினார். ரிச்சி படத்திற்காக நடிகையாக தேர்வு செய்யப்பட்ட அந்த நடிகைக்கு, சம்பளமாக ரூ.2 லட்சம் வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. ரூ.60,000 முன்கூட்டியே வழங்கப்பட்ட பிறகு, தான் கொடுத்த காசோலை பவுன்ஸ் ஆனதாக நடிகை தனது புகாரில் குற்றம் சாட்டியுள்ளார்.
பின்னர், படத்தின் நடிகரும் இயக்குனருமான ஹேமந்த், நடிகை ஆபாசமான உடைகளை அணிந்து ஆபாசமாக நடந்து கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்தியதாகவும் தன்னை அநாகரீகமாக தொட்டதாகவும் நடிகை குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் ஒரு படப்பிடிப்பிற்காக மும்பை சென்றபோது தன்னை ஹேமந்த் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக தனது புகாரில் தெரிவித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் ராஜாஜிநகர் போலீசார் குற்றம் சாட்டப்பட்ட ஹேமந்தை கைது செய்தனர்.. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது..
Read More : மருத்துவமனை பில் + இறுதிச்சடங்கு..!! ரோபோ சங்கருக்காக மனைவி செய்த நெகிழ்ச்சி செயல்..!!