கவர்ச்சி புகைப்படம்..!! உல்லாசத்திற்கு சென்ற இளைஞர்..!! வீட்டை திறந்து பார்த்ததும் காத்திருந்த பேரதிர்ச்சி..!! சென்னையில் பயங்கரம்..!!

Chennai Crime 2025

அழகான பெண்களுடன் உல்லாசமாக இருக்க ஆசைப்பட்டு, செல்போன் செயலி மூலம் தெரியாத நபர்களைத் தேடிச் சென்ற வாலிபர் ஒருவர், திருநங்கையின் மிரட்டலுக்கு உள்ளாகி பணம், செல்போன் உள்ளிட்டவற்றை இழந்த சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 21 வயதான உதயகுமார் என்பவர், சென்னை கொரட்டூர் பகுதியில் தங்கி தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவர், சமூக வலைதளம் மூலம் பெண்களை தேடியுள்ளார். அப்போது, ஒரு செல்போன் செயலி மூலம் ‘அஸ்விதா’ என்ற பெயரில் கவர்ச்சிகரமான புகைப்படத்துடன் வந்த அழைப்பைப் பார்த்து அவர் மயங்கினார்.

உல்லாசத்திற்காக அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததால், அதில் குறிப்பிடப்பட்டிருந்த வளசரவாக்கம், முரளி கிருஷ்ணா நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு உதயகுமார் சென்றுள்ளார். அழகான பெண் இருப்பார் என்று எதிர்பார்த்து உள்ளே சென்ற உதயகுமாருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு இருந்தது ஒரு திருநங்கை.

திருநங்கையான அஸ்விதா மற்றும் அவருடன் இருந்த மற்றொரு வாலிபர் ஆகிய இருவரும் சேர்ந்து உதயகுமாரை சரமாரியாகத் தாக்கியுள்ளனர். மேலும், கத்தியைக் காட்டி மிரட்டி, அவரிடமிருந்த செல்போன் மற்றும் பணத்தையும் பறித்துக்கொண்டனர். இச்சம்பவம் குறித்து வெளியே யாரிடமாவது சொன்னால், கொலை செய்து விடுவோம் என மிரட்டி அவரை விரட்டியடித்துள்ளனர்.

இதையடுத்து, பாதிக்கப்பட்ட உதயகுமார் அளித்த புகாரின் பேரில் வளசரவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், இந்த செயலில் ஈடுபட்ட திருநங்கையான முஸ்தபா என்கிற அஸ்விதா (30) மற்றும் அவரது நண்பர் தினேஷ்குமார் (28) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

கைதான இருவரும் தங்கள் கூட்டாளி ஒருவரின் உதவியுடன், செல்போன் செயலி மூலம் அழகான பெண்களின் படங்களை அனுப்பி வாலிபர்களை உல்லாசத்திற்கு வரவழைத்து, நகை, பணம், செல்போன், மோட்டார்சைக்கிள் போன்ற பொருட்களை மிரட்டி பறித்து வந்தது தெரியவந்தது. இவர்களால் பாதிக்கப்பட்ட பலர், அவமானம் கருதி போலீசில் புகார் அளிக்காமல் இருந்துள்ளனர். இதை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, இந்தக் கும்பல் தொடர்ந்து வாலிபர்களை மிரட்டி பணம் பறித்து வந்துள்ளனர்.

கைதான இருவரிடமிருந்து ரூ.95 ஆயிரம் ரொக்கம், 11 செல்போன்கள், ஒரு கத்தி மற்றும் 4 மோட்டார்சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், இந்தச் சம்பவத்தில் தலைமறைவாக உள்ள இவர்களது நண்பரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். சமூக வலைதளங்கள் மூலம் அறியாத நபர்களுடன் பழகும்போது ஏற்படும் ஆபத்தை உணர்த்தும் வகையில் இச்சம்பவம் அமைந்துள்ளது.

Read More : குழந்தைகளுக்கு ஏன் தினமும் முட்டை கொடுக்க வேண்டும்?. 5 முக்கிய காரணங்கள் இதோ!.

CHELLA

Next Post

அதிகாலையிலேயே அதிர்ச்சி..!! அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்..!! அப்பளம் போல் நொறுங்கிய கார்..!! 4 பேர் துடிதுடித்து பலி..!! ஓசூரில் சோகம்..!!

Sun Oct 12 , 2025
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை அடுத்தடுத்து வாகனங்கள் மோதிக்கொண்ட கோர விபத்தில், ஒரு காரில் பயணித்த 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று அதிகாலை நேரத்தில் ஓசூர் அருகேயுள்ள தேசிய நெடுஞ்சாலையில் வழக்கம் போல வாகனங்கள் சென்றுகொண்டிருந்தன. அப்போது, அடையாளம் தெரியாத ஒரு வாகனம் மீது ‘பிக்கப்’ வேன் ஒன்று திடீரென மோதி விபத்துக்குள்ளானது. இந்த […]
Accident 2025

You May Like