பாலிவுட் சூப்பர் ஸ்டார், பாலிவுட் பாட்ஷா, கிங் கான் என்று அழைக்கப்படுபவர் நடிகர் ஷாருக்கான்.. கடந்த சில ஆண்டுகளாக ஹிட் படம் கொடுக்காமல் திணறி வந்த ஷாருக்கான், பதான், ஜவான், டங்கி என அடுத்தடுத்து பிளாக்பஸ்டர் கொடுத்து இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்தார்..
அவர் தற்போது கிங் என்ற ஆக்ஷன் த்ரில்லர் படத்தில் நடித்து வருகிறார்.. இந்த படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. கடந்த மே மாதம் படப்பிடிப்பு தொடங்கியதிலிருந்து ரசிகர்கள் ஒவ்வொரு அப்டேட்டையும் கொண்டாடி வருகின்றனர்..
அந்த வகையில் தற்போது கிங் படத்தின் படப்பிடிப்பு மும்பையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மும்பையில் உள்ள கோல்டன் டொபாகோ ஸ்டுடியோவில் இந்த படத்தின் சண்டை காட்சிகள் இன்று படமாக்கப்பட்டது.. அப்போது நடிகர் ஷாருக்கானுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல் அவரின் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது… ஷாருக்கான் மருத்துவ உதவிக்காக அமெரிக்கா சென்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன..
இது ஒரு கடுமையான காயம் இல்லை என்றாலும், தசைப்பிடிப்பு அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது.. இதையடுத்து நடிகரின் குழு, வெளிநாட்டில் முன்னெச்சரிக்கை சிகிச்சையைத் தேர்ந்தெடுத்ததாகவும், அவருக்கு கிடைக்கக்கூடிய சிறந்த சிகிச்சையைப் பெறுவதை உறுதிசெய்ததாகவும் கூறப்படுகிறது..
சண்டைப் பயிற்சிகளின் போது ஷாருக்கான் காயமடைவது இது முதன்முறையல்ல.. இதற்கு முன்பு அவருக்கு பல காயங்கள் ஏற்பட்டுள்ளன..
ஷாருக்கானை குறைந்தது ஒரு மாதமாவது முழுமையான இடைவெளி எடுக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. இதன் விளைவாக, படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக ந்றுத்தப்பட்டுள்ளது. பிலிம் சிட்டி, கோல்டன் டொபாகோ மற்றும் YRF ஸ்டுடியோஸ் போன்ற இடங்கள் ஆரம்பத்தில் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் முன்பதிவு செய்யப்பட்டன, ஆனால் இப்போது மறு அறிவிப்பு வரும் வரை முன்பதிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அடுத்த அட்டவணை செப்டம்பர் அல்லது அக்டோபரில் மீண்டும் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கிங் படத்தில் அபிஷேக் பச்சன், ராணி முகர்ஜி, தீபிகா படுகோன், அர்ஷத் வார்சி, அபய் வர்மா, அனில் கபூர், ஜாக்கி ஷெராஃப், ராகவ் ஜுயால், ஜெய்தீப் அஹ்லாவத், சவுரப் சுக்லா மற்றும் சுஹானா கான் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்..
அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும், படம் காந்தி ஜெயந்தி 2026 வெளியீட்டை இலக்காகக் கொண்டிருந்ததாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதால் இந்த படம் வெளியாவதில் தாமதம் ஏற்படுமா என்பது தெரியவில்லை..
எது எப்படியோ ஷாருக்கான விரைவில் குணமடைய வேண்டும் என்றும், கிங் படப்பிடிப்புக்கு திரும்பும்போது அதே அளவு சக்திவாய்ந்த ரீ எண்ட்ரி கொடுக்க வேண்டும் என்று அவரின் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்..
Read More : 16 நிமிடங்கள் தான்.. தாய்லாந்து சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஹைதராபாத் திரும்பியது..