வெட்கக்கேடு.. யாருக்குமே பாதுகாப்பு இல்ல.. அடிப்படையிலேயே Flawed அரசு.. ஸ்டாலினை சாடிய இபிஎஸ்..

6873285 newproject21 1

ஸ்டாலின் ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை இருப்பது வெட்கக்கேடானது என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது சமூக வலைதள பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ளார்.. அவரின் பதிவில் “ கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே, 13 வயதான ரோகித் என்ற சிறுவன் காரில் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், ஈரோடு குமலன்குட்டை பகுதியைச் சேர்ந்த 12ம் வகுப்பு மாணவன் ஆதித்யா, நேற்று மாலை பள்ளிக்கு அருகில் உயிரிழந்து கண்டறியப்பட்டதாகவும் வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.


ஸ்டாலின் ஆட்சியில் எங்கும், எப்போதும், யாருக்கும், யாராலும் பாதுகாப்பு இல்லாத நிலை இருப்பது வெட்கக்கேடானது. 13 வயது சிறுவனை காரில் கடத்தி கொலை செய்யும் அளவுக்கு குற்றவாளிகளுக்கு அச்சமற்ற நிலை இருப்பது என்பது, காவல்துறையை நிர்வகிக்க வேண்டிய பொம்மை முதல்வருக்கு உறுத்தவில்லையா? மாணவர்கள் இடையிலான மோதலில் ஈரோடு ஆதித்யா உயிரிழந்ததாக செய்திகள் வருகின்றன. மாணவர்கள் இடையே எப்படி இவ்வளவு வன்முறை உணர்வு வருகிறது? அடிப்படையிலேயே Flawed அரசாக இந்த திமுக அரசு இருப்பதையே இத்தகைய நிகழ்வுகள் உணர்த்துகின்றன.

“இன்று என்ன போட்டோஷூட் எடுக்கலாம்?” என்பதில் மட்டும் இருக்கும் சிந்தையை, “இன்று எப்படி முறையாக அரசை நிர்வகிக்கலாம்?” என்பதில் மாற்ற வேண்டும் என பொம்மை முதல்வரை கேட்டுக்கொள்வதோடு, மேற்கூறிய சம்பவங்களில் குற்றம் இழைத்தோர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

Read More : நீங்கள் வைத்தது தான் சட்டமா? இது என்ன போலீஸ் ராஜ்ஜியமா? காவல்துறையை எச்சரித்த உயர்நீதிமன்றம்..

RUPA

Next Post

தெருக்களில் ரத்தம்; சுற்றிலும் அலறல்!. சிகாகோ துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பலி!. 14 பேர் காயம்!.

Fri Jul 4 , 2025
அமெரிக்காவின் சிகாகோவில் உள்ள ரிவர் நார்த் பகுதியில் புதன்கிழமை இரவு (3 ஜூன் 2025) ஒரு உணவகத்திற்கு வெளியே நடந்த துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர் மற்றும் 14 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் மூவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனத்தின் அறிக்கையின்படி , இந்த சம்பவம் ஒரு பாடகரின் ஆல்ப வெளியீட்டு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உணவகத்திற்கு வெளியே நடந்தது . […]
Chicago mass shooting 11zon

You May Like