பிரேசிலின் சாண்டோஸ் நகரத்திற்கு அருகே ஹாட் ஏர் பாலூன் தீப்பற்றி விழுந்ததில் எட்டு பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரேசில் நாட்டின் தென் மாநிலமான சான்டா கட்டேரினாவில் செயின்ட் ஜானை போன்ற கத்தோலிக்க செயின்ட்களை கொண்டாடும் விழா ஜூன் மாதத்தில் நடைபெறும். இந்த விழாவின் ஒரு பகுதியாக ராட்சத பலூன் (hot-air balloon) மூலம் மக்கள் ஆகாயத்தில் பறப்பார்கள். பிரையா கிராண்டு என்பது இந்த ராட்சத பலூன் பறப்பதற்கு ஏற்ற இடம் திகழ்ந்து வருகிறது.
இந்தநிலையில், நேற்று சான்டா கட்டேரினா மாநிலத்தில் ராட்சத பலூனில் 29 சுற்றுலாப் பயணிகள் பறந்து கொண்டிருந்தனர். அப்போது, பலூன் திடீரென தீப்பிடித்து எரிந்தது. தொடர்ந்து கட்டுப்பாட்டை இழந்த பாலூன் முழுவதுமாக எரிந்து, மக்கள் நின்று கொண்டிருக்கும் தொட்டி கீழே விழுந்தது. இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். 21 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். தீவிபத்தின் காரணம் என்ன என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். பைலட்டும் உயிரிழந்ததாகத் தெரியவந்துள்ளது.
பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்தார், மேலும் மத்திய மற்றும் மாநில நிறுவனங்கள் இரண்டும் நடந்து வரும் மீட்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதை உறுதிப்படுத்தினார்.
கடந்த வாரம் சனிக்கிழமை இதுபோன்ற ராட்சத பலூன் விழுந்ததில் 27 வயது பெண் ஒரவர் உயிரிழந்தார். 11 பேர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் பிரேசிலில் ஹாட் ஏர் பாலூன் பயணங்களின் பாதுகாப்பு மீதான கேள்விகளை எழுப்பியுள்ளது.