சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 உயர்ந்து, ரூ..74,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது..
2025 ஆம் ஆண்டில் தங்க விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்க்த்தின் தேவை உயர்ந்துள்ளது.
தங்கத்தின் தேவை அதிகரித்து வருவதால் தங்கத்தின் விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.. எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது.
ஆகஸ்ட் மாதத்தை பொறுத்த வரை தங்கம் விலை உயர்வதும், பின்னர் குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. கடந்த சில நாட்களில் ரூ.1300-க்கு வரை விலை குறைந்தது. ஆனால் தங்கம் விலை நேற்று முன் தினம் மீண்டும் உயர்ந்தது.. எனினும் நேற்று தங்கம் விலை குறைந்தது
இந்த நிலையில் தங்கம் விலை இன்று மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது.. அதன்படி சென்னையில் ஒரு கிராம் ரூ.100 உயர்ந்து ரூ.9,315-க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு சவரன் ரூ.800 உயர்ந்து, ரூ..74,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது.. அதே போல் இன்று வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது… இதனால் ஒரு கிராம் வெள்ளி ரூ.2 உயர்ந்து ரூ.130-க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.1,30,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை ஒரே நாளில் ரூ.800 உயர்ந்துள்ளதால் நகைப்பிரியர்களும் பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்..