மதுரையில் மின்சாரம் பாய்ந்து 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது..
மதுரை வாடிப்பட்டி அருகே ஆண்டிப்பட்டி பங்களா என்ற இடத்தில் சோமசுந்தரம் என்பவர் டீக்கடை நடத்தி வருகிறார்.. இந்த டீக்கடையில் பால முருகன் என்பவர் டீ மாஸ்டராக வேலை செய்து வருகிறார்.. இன்று அதிகாலை பாலமுருகன் டீக்கடையில் வழக்கம் போல் வேலை செய்து கொண்டிருந்த போது, அங்கு அலங்காரத்திற்காக தொங்கவிடப்பட்டிருந்த சீரியல் லைட்டின் வயர் அறுந்து விழுந்துள்ளது..
அப்போது இருந்து மின்சாரம் பாயந்ததால் டீ மாஸ்டார் சுருண்டு விழவே, அதனை பார்த்த டீக்கடை உரிமையாளரின் மகன் ரஞ்சித் குமார் (35) அவரை காப்பாற்ற முயன்றுள்ளார்.. ஆனால் காப்பாற்ற முயன்றவர் மீதும் மின்சாரம் பாய்ந்ததால் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்..
இந்த சம்பவம் குறித்து வாடிப்பட்டி காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.. மேலும் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.. மின்சாரம் பாய்ந்து 2 பேர் உயிரிழந்த சம்பவம் மதுரையில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது..
Read More : ஒரு லிட்டர் ஆவின் நெய் எவ்வளவு தெரியுமா..? அதிரடியாக உயர்ந்த விலை..!! அதிர்ச்சியில் மக்கள்..!!



